உச்ச நீதிமன்றம் தனியார் நிறுவனங்கள் அதார் சரிபார்ப்பு முறை மூலம் சிம் கார்டு விற்பனை செய்ய் தடை வித்துள்ள நிலையில் அதனை வெள்ளிக்கிழமை உறுதி செய்த மத்திய அரசு இனி டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் மின்னணு சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆர்டர் போட்டுள்ளது.
உச்ச நீதி மன்றம் செப்டம்பர் மாதம் ஆதார் குறித்த தீர்ப்பில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தரவினை பயன்படுத்த தட்டை விதித்தது.
எப்போது முதல் ஆதார் தேவையில்லை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்ய முடிவு செய்துள்ள டெலிகாம் துறையும், மத்திய அரசு நவம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
ஆதார் நகல் மூலம் சிம் கார்டு வாங்க முடியுமா?
அதன் படி டெலிகாம் நிறுவனங்கள் இனி புதிய சிம் கார்டுகளை விற்கும் போது வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களைக் கட்டாயமாகக் கேட்கக் கூடாது. ஆனால் ஆதார் கார்டு நகலினை சமர்ப்பித்துச் சிம் கார்டு வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் பழைய முறை
அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 2018 நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் சரிபார்ப்பு முறையினைச் செய்ய முடியாது என்பதால் பழைய முறைப் படி தான் சிம் கார்டுகள் விற்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
புழம்பும் டெலிகாம் நிறுவனங்கள்
அதார் சரிபார்ப்பு முறையினைத் தங்களது சிம் கார்டு விற்பனை சேவைக்காக அமல்படுத்த கோடி கணக்கில் செலவு செய்த டெலிகாம் நிறுவனங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பழைய முறையில் சிம் கார்டு விற்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு தங்களது அமைப்புகளை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
டெலிகாம் துறை
மேலும் ஆதார் இணையதளத்தில் இருந்த மொபைல் எண், ஆதார் எண் இணைப்புச் சரிபார்ப்பு முறையினையும் திரும்பப் பெறுவதாக டெலிகாம் துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications