எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் வர இருக்கும் அக்டோபர் 31-ம் தேதி முதல் தினம் 20,000 ரூபாய் வரையில் மட்டுமே ரொக்கப் பணம் பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. இதுவே அக்டோபர் 30-ம் தேதி அரை 40,000 ரூபாய் வரை எஸ்பிஐ ஏடிஎம் மையங்கள் அனுமதி அளிக்கும். அது மட்டும் இல்லாமல் டிடிஎஸ் பிடித்தத்தினைத் தவிர்க கூடிய படிவம் 15G/H சமர்ப்பிக்கும் விதிகளிலும் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளனர்.
இதுவே அதிகப்படியான தொகையினை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க வேண்டும் என்றா அதற்கு ஏற்றப் பிற கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற வேண்டும்.
கூடுதல் கட்டணம்
எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் இருந்து அதிகத் தொகை எடுக்கக் கூடிய ஏடிஎம் கார்டுகளைப் பெற்றால் அதற்குக் கூடுதலான ஆண்டுக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எஸ்பிஐ டெபிட் கார்டு பயனர்கள்
2018 மார்ச் 31-ம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 39.50 கோடி டெபிட் கார்டுகளை விநியோகம் செய்துள்ளது. அதில் 26 கோடி டெபிட் கார்டுகள் தொடர்ந்து பரிவர்த்தனை செய்யக் கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள்
எஸ்பிஐ வங்கியின் கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள் மூலம் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு மட்டுமே 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகக் குறைக்கப்படுகிறது.
பிற கார்டுகள்
இதுவே எஸ்பிஐ கோல்டு மற்றும் பிளாட்டினம் டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்கள் முறையே தினமும் 50,000 ரூபாய் மற்றும் 1 லட்சம் ரூபாயினை ரொக்க பணமாக ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஏன் இந்த அதிரடி முடிவு?
எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் மோசடிகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் இழப்பினை குறைக்கவே எஸ்பிஐ வங்கி இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
படிவம் 15G/H
பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது வரும் வட்டி பணத்திற்குப் பிடித்தம் செய்வது வழக்கம். வருமான வரி செலுத்தும் அளவில் வருவாய் இல்லாதவர்கள் அதிலிருந்து விலக்கு பெற தங்களது வங்கி கணக்கின் தாய் கிளைக்குச் சென்று படிவம் 15G/H-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வரி விலக்கு
தாய் வங்கி கிளைக்குத் தான் சென்று படிவம் 15G/H-ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளித்துள்ள எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் எந்த ஒரு எஸ்பிஐ வங்கி கிளைக்குச் சென்றும் படிவத்தினைச் சமர்ப்பிக்கலாம் என்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
அன்லைன்
படிவம் 15G/H-ஐ ஆன்லைனில் சமர்ப்பிக்கும் சேவையினை எஸ்பிஐ வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியின் இந்த முடிவு எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
பணம் டெபாசிட்
எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் தாய் கிளை இல்லாமல் பிற கிளைகளில் பணத்தினை டெபாசிட் செய்யும் போது அதிகபட்சம் 25,000 ரூபாய் வரையில் மட்டுமே செய்ய முடியும் என்று இருந்து வந்த வரம்பினையும் எஸ்பிஐ தளர்த்தியுள்ளது.
சிப் கார்டுகள்
பாதுகாப்பு காரணங்களுக்காகப் பழைய மேக்னட்டிக் டேப் கார்டுகளை நீக்கி புதிய சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை இலவசமாக வழங்கும் பணியிலும் எஸ்பிஐ வங்கி செய்து வருகிறது. இதன் மூலம் ஸ்கிம்மிங் முறையில் டெபிட் கார்டு மோசடி செய்வது குறையும் என்று கூறுகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications