சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட்போன் வைத்திருப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலை இன்று வீட்டுக்கு 3-4 ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்ளும் அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது என்றால் மிகையாகாது. இதிலும் பலர் தங்களது ஸ்மார்ட்போன்களை 2 அல்லது 3 வருடத்திற்கு ஒருமுறை மாற்றிய வண்ணம் உள்ளது, ஏன் சிலர் ஒவ்வொரு வருடமும் ஒரு ஸ்மார்ட்போனை மாற்றி வருவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஸ்மார்ட்போனில் மிக முக்கிய அம்சமாக இருக்கும் டச் ஸ்கீர் தான் எளிதில் உடைய கூடியவை. அதைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். டச்ஸ்கிரீனை பாதுகாக்க பெரிதும் உதவும் ஒன்று தான் டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass).
ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். டெம்பர்ட் கிளாஸ் தயாரிப்பது தான் 9 மடங்கு லாபம் தரும் சூப்பரான பிஸ்னஸ் ஐடியா.
நாம் கடைகளில் வாங்கும் டெம்பர்ட் கிளாஸ் விலை 100 முதல் 200 ரூபாய் வரையில் இருக்கும், ஆனால் இதன் உற்பத்தி விலை வெறும் 10 ரூபாய் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கும் ஒரு டெம்பர்ட் கிளாஸ் விற்பனை செய்தாலே 90 ரூபாய் லாபம்.
ஆனால் இதை எப்படிச் செய்வது என்பதைத் தான் நாம் இந்த வீடியோவில் பார்க்ப்போகிறோம்.