ஆட்டோமொபைல் சந்தையில் கார், பைக்குகளுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி போட்டாலும் மக்கள் இதனை வாங்குவது குறைக்கவில்லை என்று சொன்னால் மிகையாகாது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 4 சக்கர வாகன விற்பனையில் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகத் திகழும் மாருதி சுசூகி சுமார் 52.5 சதவீதம் என்ற மாபெரும் சந்தை பங்கீட்டை கொண்டு முன்னிலை வகிக்கிறது.

மாருதி சுசூகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஷிப்ட், பெலானோ, பிரீசா, செலரியோ என அதன் முன்னணி தயாரிப்புகள் தாறுமாறாக விற்பனையாகியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,51,512 கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் 68 சதவீதம் மாருதி ஷிப்ட் கார்கள் என்பது கூடுதல் தகவல். மாருதி சுசூகி விற்பனை செய்த 1,51,512 கார்களில் 22,228 கார்கள் ஷிப்ட் மாடல் தான். இதைத் தொடர்ந்து ஆல்டோ 21,719 கார்களும், டிசையர் 21,296 கார்களும், பெலனோ 18,631 கார்களும், பிரீசா 14,425 கார்களும், வேகன் ஆர் 13,252 கார்களை விற்பனை செய்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் டாப் 10 பட்டியலில் முதல் 6 இடத்தை மாருதி சுசூகி பெற்றுள்ள நிலையில், அடுத்த 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 எலைட், ஐ10 கிரான்ட், கிரெட்டா ஆகிய கார்களைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து 10வது இடத்தை மீண்டும் மாருதியின் செலாரியோ பெற்றுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications