பெங்களூரு: இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஐடி நிறுவனங்களில் பணிக்கு செறும் பிரெஷர்களின் ஆண்டு ஊதியத்தினை 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளனர். 5 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாகப் பிரெஷர்களின் சம்பளத்தினை ஐடி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவின் 167 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறையில் டாப் 5 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் பிரெஷர்களின் திறன் மற்றும் அறிவினை பொருத்து பிரெஷர்களின் சம்பளத்தினை உயர்த்தியுள்ளதாகக் கூறுகின்றன.
சம்பள உயர்வு
பிரெஷர்களுக்கு 6 முதல் 10 சதவீத சம்பள உயர்வினை ஐடி நிறுவனங்கள் அளித்து இருந்தாலும் அது அவர்களது திறன் மற்றும் அறிவினை பொறுத்ததே ஆகும். தற்போது ஐடி நிறுவனங்களுக்கு 3.3 லட்சம் ஆண்டுச் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வளாக நேர்காணல் (Campus Interview)
மூன்று வருடங்களாக இந்திய ஐடி நிறுவனங்கள் வளாகத் தேர்வு மூலம் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது குறைந்து இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் அதிகமாகியுள்ளது.
டிசிஎஸ் மற்றும் எச்சிஎல்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் வளாகத் தேர்வு மூலம் பிரெஷர்களுக்கு மாத சம்பளம் 28,000 ரூபாயினை அளிக்கிறது. இதுவே எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் மாதம் 25,000 ரூபாயினைச் சம்பளமாக அளிக்கிறது.
விப்ரோ
தங்களது நிறுவனத்தில் பிரெஷர்களின் சம்பளத்தினை 3.3 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக விப்ரோ நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரியான சுராப் கோவில் தெரிவித்துள்ளார்.
அதிகச் சம்பளம்
என்ன தான் 3.6 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு ஊழியர்களைப் பணிக்கு எடுத்தாலும் மறு பக்கம் அதிகத் திறன் படைத்த பிரெஷர்களை 8 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் அளித்தும் பணிக்கு எடுப்பதாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் தரவுகள் கூறுகின்றன.
நாஸ்காம்
பெறும் நிறுவனங்கள் பிரெஷர்களின் சம்பளத்தினை உயர்த்தும் போது சிறு நிறுவனங்களும் அதனையே பின்பற்றுவார்கள் என்றும் நாஸ்காம் கூறியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications