இந்திய ரிசர்வ வங்கி ஊழிர்கள் சங்கம் மத்திய அரசு ஆர்பிஐ-ன் சுயாட்சி உரிமையகளில் தலையிடுவது சரியல்ல என்றும் அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.
மத்திய வங்கியைத் துறை கவரனரான வைரல் ஆச்சர்யா ஒரு பொது மேடையில் ஆர்பிஐயில் மத்திய அரசின் தலையீடு குறித்துப் பேசியதை அடுத்து ஆர்பிஐ ஊழியர்கள் சங்கமும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
துணை கவர்னர்
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னாரான வைரல் ஆசார்யா மத்திய அரசு ஆர்பிஐ வங்கியின் சுயாட்சிக்கு மரியாதை அளிக்காவிட்டால் நிதி சந்தை பெறும் அளவில் பாதிப்படையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம்
பொதுவாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஆர்பிஐ, சிபிஐ போன்ற சுயாட்சி உரிமைகள் கொண்ட அரசு நிறுவனங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் சில வகையில் அழுத்தங்களை அங்குள்ள அதிகாரிகளுக்குக் கொடுக்கும்.
ரகுராம் ராஜன்
அப்படிச் சில அழுத்தங்களை மத்திய அரசு முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் மீது திணித்ததால் தான் அவர் அந்தப் பதவியில் நீட்டிக்க விரும்பாமல் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ்
அதே போன்ற ஒரு சூழல் ரிசர்வ் வங்கியில் நீண்ட காலமாக உள்ளதாகவும் அதன் போக்கு சரியில்லை என்பதை வெளிப்படுத்தவே துணை கவர்னர் வைரல் ஆச்சர்யா தெரிவித்துள்ளார் என்றும் கூறுகின்றன. இதில் உர்ஜித் பட்டேலின் நிலை என்னவென்று தெரியவில்லை. மறுபக்கம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளித்த கடன்களில் ஆர்பிஐக்கு தொடர்பு உள்ளது என்று மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இதே போன்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மீதும் ஆர்பிஐ கோபம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
டி20
மத்திய அரசு முடிவு எடுக்கும் அதிகாரங்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று இருக்கலாம். ஆனால் ஆர்பிஐ டெஸ்ட் மேட்ச் போன்று ஆராய்ந்து தான் முடிவுகளை எடுக்கும் என்றும் ஆச்சாரியா கூறியுள்ளார்.
உர்ஜித் படேல்
இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை உர்ஜித் படேல் சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications