பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவித்து இருந்த மூலதனம் வழங்கும் திட்டத்தின் இரண்டாவது தவணையை இந்த மாத இறுதிக்குள் வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்திடமிருந்து சில சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகியுள்ளது.
என்ன செய்யணும்
மத்திய அரசின் இரண்டாவது தவணை மூலதனம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டால், வங்கிகளின் கடன் வழங்குதளுக்கே பெரும்பகுதியை செலவழிக்க வேண்டும். குறிப்பாக சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு முன் உரிமை கொடுத்து கடன்களை வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் வழிகாட்டி இருக்கிறது.
காலாண்டு ஃபைர்ஸ்ட்
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாகி விட்டன. இருப்பினும் இன்னும் சில வங்கிகளின் முடிவுகள் வெளியாகவில்லை. எனவே அனைத்து பொதுத் துறை நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியான பின், ஒவ்வொரு வங்கியின் நிதி நிலையைப் பொறுத்து அவற்றுக்கான மூலதன தேவையை நிதி அமைச்சகம் இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்து வழங்கும்.
நிதி
இந்திய அரசாங்கம், அரசு வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. அதில் 2018 - 19 நிதி ஆண்டில் முதல் கட்டமாக 11,337 கோடி ரூபாயை கொடுத்துவிட்டார்கள். இந்த நிதி ஆண்டில் இரண்டாம் கட்டமாக இந்த 54,000 கோடி ரூபாயை வங்கிகளுக்கு வழங்க இருக்கிறார்கள்.
யார் அதிகம் பெற்றது
கடந்த முறை அரசு வழங்கிய 11,337 கோடி ரூபாயில் அதிகபட்ச தொகையாக 2,816 கோடி ரூபாயை பஞ்சாப் நேஷனல் பேங்க் பெற்றது. அதனைத் தொடர்ந்து கார்ப்பரேஷன் பேங்க் 2,555 கோடி ரூபாய், ஐஓபி 2,157 கோடி ரூபாய், ஆந்திரா பேங்க் 2,019 கோடி ரூபாய், அலஹாபாத் பெங்க் 1,790 கோடி ரூபாய் பெற்றார்கள்.
இந்த முறை
நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் பேங்க் இன்னும் மத்திய அரசு நிதி வழங்கும் பட்டியலில் இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டுக் கொண்டு இருக்கிறதாம். வங்கிகளுக்குள் "என்னங்க இது, ஏற்கனவே போன முறை நல்ல தொகை வாங்கி இருக்காங்க, இந்த முறையும் இவங்களுக்கு கொடுத்தா நாம எங்க போறது" என்கிற ரீதியிலேயே பேசிக் கொண்டு இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications