இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ 2018-2019 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் மூன்று காலாண்டுக்கு பிறகு மீண்டும் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
நிகர லாபம்
ஆனால் சென்ற நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு எஸ்பிஐ வங்கியின் தொகுக்கப்பட்டு நிகர லாபம் 69 சதவீதம் சரிந்து 576.46 கோடி ரூபாயாக உள்ளது.
இதுவே ஏப்ரல் - ஜூன் இடையிலான காலாண்டில் எஸ்பிஐ வங்கி 4,875.85 கோடி ரூபாய் நட்டத்தினைப் பதிவு செய்து இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் வாரா கடன் அதிகரிப்பு என்றும் கூறப்பட்டது.
வருவாய்
சென்ற வருடம் எஸ்பிஐ வங்கியின் வருவாய் 74,948.51 கோடி ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 79,302.72 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளது.
வாரா கடன்
2017-2018 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் வாரா கடன் அளவு 9.95 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 9.95 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பங்கு சந்தை
இன்று காலாண்டு அறிக்கை வெளியீட்டில் எஸ்பிஐ வங்கி லாபம் அடையும் என்று கணிக்கப்பட்டு இருந்ததால் 9.85 புள்ளிகள் என 3.45 சதவீதம் உயர்ந்து 295.30 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications