பணமதிப்பிழப்பு (demonetisation) என்ற வார்த்தை இந்தியர்களுக்குத் தெரியவந்த நாள் இன்று. இந்தியாவை பணமதிப்பிழப்பு புயல் தாக்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு. மோடிஜி மைக்கை பிடித்து "மித்ரான்" என்று கூறினார் அதன் பிறகு அந்த மாதம் முழுவதும் ஏடிஎம் வாசலில் தான் குடியிருந்தனர் மக்கள். சிலர் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டனர், சிலர் வேறு வழி இன்றி கியூவில் நின்றனர். மோடி இந்த அறிவிப்பை விடுத்த போது அதைச் சுற்றி பல பதில் இல்லா கேள்விகள், பல வினோத கரணங்கள் சிலர் கூறினார்.
அதில் முக்கியமான இரண்டு சாத்தியக்கூறுகள் மக்களால் பேசப்பட்டது ஒன்று- வங்கியில் காலியாக இருக்கும் கஜானாவை நிரப்ப நினைக்கிறார் மோடி, மற்றோன்று- இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். ATM-க்கு பதிலாக paytm வந்துவிட்டது. யாருமே நினைத்துப் பார்க்காத அளவிற்கு மக்கள் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று செத்து மடிந்தனர்.
இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள், நாம் இன்றைக்குக் கலர் கலராகக் காந்தி தாத்தா அச்சு அடித்த நோட்டை பயன்படுத்திக்கிறோம். நாம் அதைச் மறந்திருக்கலாம் ஆனால் அதைச் சுற்றி நடக்கும் அரசியல் இன்னும் ஓயவில்லை. இது குறித்து சமூக வலைத்தளங்களில் இன்று பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் சில உங்கள் பார்வைக்கு.
மம்தா பேனர்ஜி
இது ஒரு கருப்பு தினம், இதை நான் பணமதிப்பிழப்பு அறிவித்த அன்றைக்கே கூறினேன். இதைப் பொருளாதார வல்லுநர்கள்,பொது மக்கள் இப்பொது ஒத்துக்கொள்வார்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மோசமான குற்றம்
ஆங்கிலேயர் ஆட்சி செய்யும்போது கூட இப்படி ஒரு மோசமான செயலை செய்தது இல்லை.
பாடம்
பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்
நோட்டில் சிப்
2000 நோட்டில் சிப் உள்ளது
இரண்டாம் பிறந்த நாள்
புதிய இந்தியாவிற்கு இரண்டாவது பிறந்த நாள்
டோட்டல் இந்தியாவும் குளோஸ்
ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தேன் டோட்டல் இந்தியாவும் குளோஸ்


Click it and Unblock the Notifications