உட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..!

இந்திய வர்த்தக உலகில் மிக முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்குகளில் வெறும் 19 கோடி ரூபாய் தான் உள்ளது. இது இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு நெஞ்சு வலியைக் கொடுத்துள்ளது.

அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் பெயரில் சுமார் 144 வங்கி கணக்குகள் உள்ளது. இந்தக் கணக்குளில் மொத்தமாக இருப்பதே 19.34 கோடி ரூபாய் தான் என இந்நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமம்

ரிலையன்ஸ் குழுமம்

வர்த்தகம் பாதிப்பு, வருவாய் சரிவு அதீத கடன் என ரிலையன்ஸ் குழுமம் தனது டெலிகாம் சேவையைக் கடந்த வருடம் முழுமையாக நிறுத்தியது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த, சேவை வழங்கி அதற்கான பணத்தைப் பெறாத நிறுவனங்கள் எனப் பல தரப்புகளில் நிறுவனங்கள் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் தற்போது 46,000 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது.

இந்த வருடத்தின் துவக்கத்திலேயே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தனது 119 வங்கி கணக்குகளில் 17.86 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது எனத் தெரிவித்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்தின் 25 வங்கி கணக்கில் 1.48 கோடி ரூபாய் பணம் உள்ளது எனத் தற்போது தெரிவித்துள்ளது.

 

அமெரிக்கன் டவர் கார்ப்

அமெரிக்கன் டவர் கார்ப்

இந்நிலையில் அமெரிக்கன் டவர் கார்ப் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் கொடுக்க வேண்டிய 230 கோடி ரூபாய் தொகைக்கான வழக்கு டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் வங்கி இருப்பு அளவுகள் பெரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+