நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் வழக்கமாகத் தனது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திலும், உயர் அதிகாரிகளுக்கு ஜூலை மாதத்தில் அளிக்கும். ஆனால் இந்த வருடம் அமெரிக்க விசா, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகப் பாதிப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளில் இன்போசிஸ் மூழ்கிய காரணத்தால் சரியான நேரத்தில் சம்பள உயர்வு அளிக்க முடியாமல் போனது.
இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், உயர் அதிகாரிகளுக்கு வருகிற ஜனவரி மாதம் சம்பள உயர்வு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
இந்த வருடம் இன்போசிஸ் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிகளவிலான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ள நிலையில் ஊழியர்களின் தனிநபர் திறனுக்கு ஏற்ப ஊக்கதொகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது கடுமையாவும், புதிய தொழில்நுட்பத்தை வேகமாகக் கற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம்.
சம்பள உயர்வு
இந்த ஜனவரி மாதம் இன்போசிஸ் நிறுவனத்தின் அசோசியேட் வைஸ் பிரசிடென்ட், வைஸ் பிரசிடென்ட், சீனியர் வைஸ் பிரசிடென்ட், எக்ஸ்கியூடிவ் வைஸ் பிரசிடென்ட் ஆகிய பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது. இவர்களுக்கான பட்ஜெட் தொகை ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் இந்தத் தர பிரிவில் இருக்கும் 500 அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது.
பதவி உயர்வு
இப்பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்குக் கடந்த வருடத்தைப் போலவே 3 முதல் 5 சதவீதம் வரையிலான சம்பளம் தான் இந்த வருடமும் அறிவிக்க உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இப்பிரிவில் இருக்கும் 100-150 ஊழியர்களுக்கு இந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு அளிப்பதாக அறிவித்துள்ளது.
சிடிஎஸ்
மேலும் சிடிஎஸ் நிறுவனமும் ஜனவரி காலாண்டில் தனது உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications