இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பரிவர்த்தனை 60 சதவீத சந்தையினைப் பிடித்துள்ளது என்ற செய்தி மாஸ்டர் மற்றும் விசா கார்டு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பிம் யூபிஐ
பிம் யூபிஐ செயலி மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றோறு கணக்கிற்கு எளிதாக நொடிகளில் பணத்தினை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும். அதற்குத் தேவையானது கையில் ஸ்மார்ட்போன், அதில் பிம் செயலி மற்றும் வங்கி கணக்குடன் தொடர்புகொள்ள இணையதளம். பரிவர்த்தனை செய்யும் போது பணம் அனுப்ப வேண்டிய நபரின் மொபைல் எண் மற்றும் பின் எண்ணை அளித்தாலே பரிவர்த்தனை நடந்துவிடும். அது மட்டும் இல்லாமல் வங்கி கணக்குகளை உள்ளிட்டு ஐஎம்பிஎஸ் முறையிலும் பிம் செயலியில் பணத்தினை அனுப்ப முடியும்.
ரூபே
மாஸ்டர் மற்றும் விசா போன்ற வெளிநாட்டு கார்டு பரிவர்த்தனைகளுக்குப் போட்டியாக முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கார்டு ரூபே கார்டு முறை. ரூபே கார்டில் பரிவர்த்தனை செய்யும் போது மாஸ்டர் மற்றும் விசா கார்டுகளை விட வங்கிகளுக்குச் செலவு குறைவு என்பதால் வங்கிகள் தற்போது அடிப்படை டெபிட் கார்டுகளாக ரூபே கார்டுகளைத் தான் வழங்குகின்றன.
அது மட்டும் இல்லாமல் விரைவில் கிரெடிட் கார்டுகளும் ரூபே கீழ் வழங்கப்பட உள்ளது மாஸ்டர் மற்றும் விசா கார்டு நிறுவனங்களுக்குத் தலைவலியாக மாறியுள்ளது.
மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
2018 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் டெபிட் + கிரெடிட் + பிரீபெய்டு + பிம் யூபிஐ கார்டுகள் மூலம் 628.99 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. அவற்றின் மதிப்பு 18,42,86.42 கோடி ரூபாய் ஆகும்.
பிம் யூபிஐ
பிம் யூபிஐ செயலியில் நடப்பு நிதி ஆண்டின் அரையிறுதி வரை 298.99 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. அவற்றின் மதிப்பு 11,72,686.42 கோடி ரூபாய் ஆகும்.
ரூபே (டெபிட்+கிரெடிட்+ப்ரீபெய்டு)
ரூபே கார்டுகள் மூலமாக 76.47 கோடி பரிவர்த்தனைகள் இந்த நிதி ஆண்டில் அக்டோபர் மாதம் வரை நடைபெற்றுள்ளது. அவற்றின் பதிப்பு 72,951.96 கோடி ரூபாய் ஆகும்.
பிம் + ரூபே
பிம் மற்றும் ரூபே கார்டுகளைப் பயன்படுத்தி 375.46 கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இவற்றின் மதிப்பு 12,45,638.38 கோடி ரூபாய் ஆகும்.
சந்தை மதிப்பு
பிம் + ரூபே கார்டுகளின் பரிவர்த்தனை சந்தை மதிப்பு என்று பார்த்தால் 60 சதவீதமாக உள்ளது. இதுவே செய்யப்பட்ட தொகையினை வைத்துக் கணக்கிட்டால் 67.60 சதவீதம் டிஜிட்டல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications