சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது தேவைக்கும் அதிகமான அளவில் கச்சா எண்ணெய் உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் வரையில் குறைந்துள்ளது, இது இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால் இத்துறை முதலீட்டாளர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் உற்பத்தி
ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை அக்டோபர் மாதத்தில் அதன் உச்ச விலையை அடைந்தது.
இந்நிலையில் தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது 18 சதவீதம் வரையில் விலை குறைந்து ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 70 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
69.70 டாலர்
இன்று கச்சா எண்ணெய் சந்தை வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 95 சென்டுகள் குறைந்து 69.70 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
அமெரிக்கா
இந்தத் திடீர் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கக் கச்சா எண்ணெய் சந்தை விளங்குகிறது. அமெரிக்கா லைட் க்ரூட் 8 மாத சரிவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலராகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாத உயர்வை ஒப்பிடுகையில் 20 சதவீதம் சரிவாகும். இதன் மூலம் அமெரிக்கா கச்சா எண்ணெய் சந்தை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது.
விலை சரிவு
இந்த விலை சரிவு பலனை அப்படியே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்திய மக்களுக்குக் கொடுத்தால் லிட்டருக்கு 1.50 ரூபாய் முதல் 2 ரூபாய் வரையில் பெட்ரோல் டீசல் விலை சரியும்.
More From GoodReturns

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications