உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் ஆன்லைன் டேட்டிங் சேவைகளை வழங்கும் டின்டர் மற்றும் பம்பிள் ஆகிய நிறுவனங்களை ஓரம்கட்டத் தனது பேஸ்புக் தளத்திலேயே டேட்டிங் சேவையை அறிமுகம் செய்தது.
பேஸ்புக்-இன் இந்தச் சேவை செப்டம்பர் மாதம் கோலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கனடா மற்றும் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக்-இன் இந்த டேட்டிங் சேவை அதிரடியாக விரிவாக்கம் அடைய உள்ளது.

இந்த விரிவாக்கம் டின்டர் மற்றும் பம்பிள் ஆகிய நிறுவனங்கள் சோமாக விஷயமாக அமைந்துள்ளது.
கனடா மற்றும் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்ய உள்ள பேஸ்புக் சோதனை திட்டமாகப் பேஸ்புக் ப்ரொபைல் பார்த்து விட்டு இருவரும் மேட் செய்யும் நிலையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யச் செகண்ட் லுக் என்ற பிரத்தியேக வசதியை வழங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தச் சேவை 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதாகப் பேஸ்புக் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications