இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பல புதுமைகளும் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டு வருகிறது, உதாரணமாக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் துவங்கியுள்ளது. இந்த முயற்சி மக்கள் மத்தியில் வெற்றியும் அடைந்துள்ளது.
இதேபோல் எப்போதும் இல்லாத வகையில் தற்போது இந்தியாவில் பழைய கார்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தனது பழைய தயாரிப்பின் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் பழைய கார்கள் அதிகளவில் விற்பனை சந்தைக்கு வந்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் தேவையும் அதிகமாக இருந்த காரணத்தால் இத்துறையில் விற்பனை அளவு சுமார் 50 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என ஓஎல்எக்ஸ் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் விற்பனை தளம் தெரிவித்துள்ளது.
ஜனவரி - செப்டம்பர் காலத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 27 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications