காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 15 கோடீஸ்வர தொழில் அதிபர்களின் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்ட மன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஷ்கர் மாநிலங்களை அடுத்த 5 வருடத்தில் விவசாய மயங்களாக மாற்றில் உணவு, பழம் மற்றும் காய் கறி உற்பத்தியில் முன்னோடியான மாநிலமாக மாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 3.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி
கடந்த 4 வருட ஆட்சியில் மோடி தலைமையிலான அரசு 15 கோடீஸ்வரர்களின் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும் ராகும் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும், அதனை அளிக்காமல் அதை விட 10 மடங்கு கூடுதலான கடன் பணத்தினை 15 தொழில் அதிபர்களுக்காகத் தள்ளுபடி செய்துள்ளதாகவும், இதனைக் காங்கிரஸ் விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு அளிக்க விரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டிஷ்கர் சட்டமன்ற தேர்த்தல்
சட்டிஷ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நவம்பர் 12 மற்றும் 20- தேதிகளின் போது நடைபெற உள்ளது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேச தேர்தல் 2018 நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications