பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர்ஏசியா உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்களை 399 ரூபாயிலிருந்தும், சர்வதேச விமானப் பயணங்களை 1,999 ரூபாயிலிருந்து செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஏர்ஏசியாவின் இந்தச் சலுகை விலை கீழ் டிக்கெட் புக் செய்து 2019 மே மாதம் முதல் 2020 பிப்ரவரி மாதம் வரையிலான விமானப் பயணங்களைச் செய்யலாம்.
சலுகை காலம்
சலுகை விலை விமான டிக்கெட்களை 2018 நவம்பர் 18-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும். 2019 மே 6 முதல் 2020 பிப்ரவரி மாதம் வரையில் 120 வழித்தடங்களில் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் கிடைக்கும்.
உள்நாட்டு விமான டிக்கெட் சலுகை உள்ள வழித்தடங்கள்
சென்னை, பெங்களூரு, புதுத் தில்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், புனே, குவஹாத்தி, இம்பால், விசாகப்பட்டினம், ஹைதராபாத், ஸ்ரீநகர், பாக்தோகிரா, ராஞ்சி, புவனேஸ்வர், இந்தூர் ஆகிய உள்நாட்டு வழித்தடங்களில் சலுகை விலை டிக்கெட்களை ஏர் ஏசியா அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வழித்தடங்கள்
கோலாலம்பூர், பாங்காக், க்ராபி, சிட்னி, ஆக்லாந்து, மெல்போர்ன், சிங்கப்பூர், பாலி ஆகிய வெளிநாட்டு விமானப் பயண வழித்தடங்களில் ஏர்ஏசியாவின் இந்தச் சலுகைகள் கிடைக்கும்.
டிக்கெட் புக் செய்வது எப்படி?
ஏர்ஏசியாவின் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com அல்லது ஏர்ஏசியா மொபைல் செயலி மூலம் கிடைக்கும்.
ஏர்ஏசியா இந்தியா
ஏர்ஏசியா பெர்ஹட் மற்றும் டாடா குழுமம் இணைந்து இயக்கி வரும் ஏர்ஏசியா இந்தியா விமானப் போக்குவரத்திற்கு 4 வயதாகும் நிலையில் 25 நாடுகளில் 165 வழித்தடங்களில் விமானப் போக்குவரத்துச் சேவையினை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications