இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் மதிப்பு 26,157.12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன பதிப்பு 12,11.87 கோடி ரூபாய் என்றும் தரவுகள் கூறுகின்றன.
சென்ற வாரத்தில் எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலிவர் லிமிட்டட், ஐசிஐசிஐ வங்கி மற்றும் மாருதி இந்தியா நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தது. இதுவே ஐடிசி, எச்டிஎப்சி, இன்போசிஸ் மற்றும் எஸ்பிஐ வங்கி சந்தை மதிப்புச் சரிந்தது.
டிசிஎஸ்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனம் மற்றும் சந்தை மூலதனம் அதிகம் படைத்த டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் 7,16,630.43 கோடி ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதுவே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதனம் 12,111.87 கோடி ரூபாய் உயர்ந்து 6,93,022.48 கோடி ரூபாயாக உள்ளது.
இந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டட்
உலகின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8,431.31 கோடி ரூபாய் உயர்ந்து 3,62,048.36 கோடியாக ய்ள்ளது.
மாருதி
மாருதி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3,888.27 கோடி ரூபாய் உயர்ந்து 2,19,476.27 கோடி ரூபாயாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 978.28 கோடி ரூபாய் அதிகரித்து 2,29,008.87 கோடி ரூபாயாக உள்ளது.
எச்டிஎப்சி வங்கி
இந்தியாவில் வேகமான வளர்ச்சியைப் பெற்று வரும் எச்டிஎப்சி வங்கியின் சந்தை மூலதனம் 747.39 கோடி ரூபாய் உயர்ந்து 5,29,869.96 கோடி ரூபாயாக உள்ளது.
ஐடிசி
ஐடிசி நிறுவன சந்தை மூலதனம் 6,244.29 கோடி ரூபாய் சரிந்து 3,39,456.93 கோடி ரூபாயாக உள்ளது.
எஸ்பிஐ
எஸ்பிஐ வங்கியின் சந்தை மூலதனம் 2,186.52 கோடி ரூபாய் சரிந்து 2,52,565.83 கோடி ரூபாயாக உள்ளது.
எச்டிஎப்சி
எச்டிஎப்சி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 927.42 கோடி ரூபாய் சரிந்து 3,12,042.60 கோடி ரூபாயாக உள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 262.1 கோடி ரூபாய் சரிந்து 2,88,947.62 கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள்
இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும், அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், எச்டிச்ப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டட், ஐடிசி, எச்டிஎப்சி, இன்போசிஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் மாருதி நிறுவன பங்குகள் உள்ளன.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications