உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவால் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவீதமாகக் குறைந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 3.70 சதவீதமாக இருந்தது.

அக்டோபர் மாத சில்லறை பணவீக்க சரிவுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததே காரணம் என்று கூறுகின்றனர்.
நுகர்வோர் விலை குறியீட்டின் செப்டம்பர் மாதம் பணவீக்கம் சென்ற ஆண்டு 3.58 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கி மிக முக்கியமாகக் கண்காணிக்கும் குறியீடுகளில் ஒன்று நுகர்வோர் விலை குறியீடாகும்.
மத்திய வங்கி ஜூலை செப்டம்பர் மாத காலாண்டில் 3.7 சதவீதமாகச் சில்லைரை பணவீக்கம் இருக்கும் கணித்து இருந்தது. இதுவே ஜனவரி மார்ச் காலாண்டில் 3.8 முதல் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
செப்டம்பர் மாதம் தொழில் துறை வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது என்று அரசு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
காய்கறி, பெட்ரோல், டீசல் போன்ற அடிப்படைத் தேவை பொருட்கள் சில்லறை சந்தையில் விலை ஏறும் போது பணவீக்கம் அதிகரிப்பதும், அதுவே விலை குறைவாக இருக்கும் போது பணவீக்கம் குறைவதும் இயல்பு ஆகும்.
பணவீக்கம் குறைந்துள்ள நிலையில் ஆர்பிஐ டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்துமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருவேலை ரெப்போ வட்டி விகிதம் உயர்தப்பட்டால் கடன் மீதான வட்டி விகிதம் உயர்ந்து செலவு அதிகரிக்கும். மறு பக்கம் பிக்சட் டெபாசிட் போன்ற சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்ந்து லாபம் அளிக்கும்.


Click it and Unblock the Notifications