46,000 கோடி கடன், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கக் கோரி வழக்கு என மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள்.

இந்நிலையில் இந்நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஆன அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் காப்பீட்டு நிறுவனமான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் கால அவகாசம் முடியும் நிலையில் விரைவாகச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட முயற்சி செய்த போது முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவிக்காத காரணத்தாலும், சந்தையில் மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செபி அளிக்கப்பட்ட ஒப்புதல் காலம் வருடம் உள்ளது, தற்போது இந்த ஒருவருட காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடையும் நிலையில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் பங்குச்சந்தையில் இறங்க மீண்டும் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications