பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய உடன் அதன் இணை நிறுவனரான ராஜிவ் பன்சால் வெளியேற்றப்பட்டார். தற்போது பிளிப்கார்ட்டின் மற்றொரு இணை நிறுவனரான பின்னி பன்சாலும் ராஜிநாமா செய்துள்ளார். தனிப்பட்ட தவறான நடத்தை காரணமாக ராஜினாமா செய்ய அழுத்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்டினை அன்மையில் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் முழுமையாக வால்மார்ட்டுடன் இணைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
என்ன காரணம்
மறுபக்கம் தீபாவளி மற்றும் பிக் பில்லியன் டே போன்ற சலுகை விலை விற்பனையில் வால்மார்ட்டின் பிள்ப்கார்ட் தளத்தால் அமேசான் நிறுவனத்துடன் போட்டுப்போட முடியாமல் போனது. வால்மார்ட் உடன் இணைவது மற்றும் விழாக்கால விற்பனையில் ஏற்பட்ட தோல்வி இரண்டிற்கும் போறுப்பேற்று பின்னி பன்சால் தனது தலைமை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து வெளியேறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பின்னி பன்சால்
பின்னி பன்சால் பிளிப்கார்ட்டின் முக்கியமான இணை நிறுவனர் என்பது மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பல முக்கியமான சிக்கலின் போது சிறந்த முறையில் வழி நடத்திச் சென்றுள்ளார் என்றாலும் நிறுவனத்தினை முழுமையாக வால்மார்ட் உடன் ஒப்படைப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பின்னி பன்சால் எந்த ஒரு தவறும் செய்யாத நிலையில் அவரை வலுக்கட்டாயமாக வால்மார்ட் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கல்யாண் கிருஷ்ணமூர்த்தி
பிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிகாரம் வாய்ந்த தலைமை நிர்வாக அதிகாரியாகக் கல்யாண் கிருஷ்ணமூர்த்தித் தொடருவார் என்றும் மைந்திரா மற்றும் ஜபாங் தளங்கள் எப்போது போலத் தனியாகவே இயங்கும் என்றும் பிளிப்கார்ட் தரப்பில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
துணை நிறுவனங்கள்
மைந்திரா மற்றும் ஜபாங் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக அனந்த் நாராயணம் இருப்பார் என்றும், கல்யாண் கிருஷ்ணமூர்த்தியுடன் தகவல்களைப் பகிர்க்கொள்வார் என்றும், சமீர் நிஜாம் போன்பேவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் கல்யாண் மற்றும் சமீர் இருவரும் வால்மார்ட் - பிளிப்கார்ட் போர்டு உடன் தொடர்பில் இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications