அரசு ஊழியர்கள் போன்று தனியார் நிறுவன ஊழியர்களின் கிராஜூவிட்டி பணத்தினையும் மோடி அரசு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு பதிய அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கிராஜூவிட்டி வரம்பினை உயர்த்திய போதே ஊழியர்கள் சங்கங்கள் கிராஜூவிட்டி கால வரம்பினை 5 வருடத்தில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்.
தகவல்
தொழிலாளர் அமைச்சகத்திடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குத் தற்போது கிடைத்த புதிய தகவலின் படி ஊழியர்களின் சங்கங்களில் கோரிக்கையினை ஏற்று மத்திய அரசு இனி மூன்று வருடம் தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலே கிராஜூவிட்டி பணத்தினை அளிக்க முடிவு செய்துள்ளது என்று கூறுகின்றன.
தனியார் நிறுவன ஊழியர்கள்
மத்திய அரசு இந்த முடிவினை எடுத்தால் கோடிக்காணக்கான தனியார் நிறுவன ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு
மேலும் மத்திய அரசு இந்தக் கிராஜூவிட்டி கால வரம்பு குறைப்பினை 2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முன்பு அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
கிராஜூவிட்டி என்றால் என்ன?
கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டுத் தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாகப் பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.
5 வருடங்கள்
நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும். எனினும், பணியில் இருக்கும் போதே ஒரு ஊழியர் மரணமடைய நேர்ந்தால், இந்த ஐந்து வருட காலம் என்ற விதிமுறை தளர்த்தப்படும். எனவே, அவ்வூழியரின் பணிக்காலம் 1 வருடம் என்ற அளவில் குறைவாகவே இருந்தாலும் கூட, முதலாவதாகக் கூறப்பட்ட விதிமுறை நிறைவேறும் பட்சத்தில் அவ்வூழியர் கிராஜுவிட்டி பெறும் தகுதியைப் பெறுவார். தற்போது அது 3 வருடமாகக் குறைக்கப்பட உள்ளது.
கிராஜுவிட்டி கணக்கிடுதல்
கிராஜுவிட்டி தொகையானது, ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் நிறைவு செய்த ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் தலா 15 நாள் ஊதியம் என்ற அளவில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது (இங்கு ஊதியம் என்பது கடைசி 10 மாத பணிக்காலத்தின் போது பெறப்பட்ட சராசரி ஊதியம் என்பதாகக் கொள்ளப்படுகிறது).
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications