மோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்களை அமைப்பதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அரசாங்கம் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.

 

மோடி அரசு

மோடி அரசு

இந்தத் திட்டம் நிதி அயோக் உடன் கலந்தாலோசித்துக் கப்பல் அமைச்சகத்தின் இறுதி வடிவத்தை வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டுப் பொதுத்தேர்தலை ஓட்டி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யப் படுவதன் மூலம் மோடி அரசு வலுப்பெறும் என நம்பப்படுகிறது.

 

சலுகைகள்

சலுகைகள்

அரசு தரப்பில் இந்தத் திட்டத்தில் நிதி சார்ந்த மற்றும் நிதி அல்லாத சலுகைகள் வழங்கப்படும். வரி விடுமுறை, மூலதன மானியம் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி போன்ற சலுகைகள் கிடைக்கும்.

 

 

வேலைவாய்ப்பு மண்டலங்கள்
 

வேலைவாய்ப்பு மண்டலங்கள்

கப்பல் அமைச்சகம் 14 இடங்களில் இந்தத் தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்களை அமைக்க முன்மொழிந்துள்ளது. இந்த மண்டலங்கள் கடலோர மாநிலங்களில் மதிக்கப்படும் மற்றும் இந்த இடங்களுக்குச் செல்ல தனிவழி உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரு லட்சம் கோடி

ஒரு லட்சம் கோடி

செலவின நிதிக் குழுவிற்கு (EFC) ஒரு குறிப்பை ஒப்புதலுக்காக எழுதியுள்ளது கப்பல் அமைச்சகம். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை ஆலோசனைக்கு அமைச்சரவை குறிப்பு அனுப்பப்படும்.

ஆரம்பக் கட்டத்தில் இந்த மண்டலங்களை அமைக்கச் சுமார் ஒரு லட்சம் கோடி செலவு ஆகும் எனவும், இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பிரித்துக்கொள்ளப்படும். இந்த மண்டலங்களை அமைக்கக் கடலோர மாநிலங்கள் குறைந்தபட்சம் 2,000 ஏக்கர் நிலப்பரப்பை அளிக்கவேண்டும்.

 

நிதி பெறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும்

நிதி பெறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும்

அது போக இந்தியா இந்தத் திட்டத்திற்காகப் பலதரப்பு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும். என் என்றால் இந்த வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்க அதிகபட்சமாக 4 லட்சம் கோடி வரை முதலீடுகள் தேவைப்படும்.

 

 

உள்கட்டமைப்பு வசதி

உள்கட்டமைப்பு வசதி

இந்த வேலைவாய்ப்பு மண்டலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளால் இங்குள்ள நிறுவனங்களுக்கு நீண்ட நாள் கடன் வசதி கிடைக்கும் அதை வைத்து அவர்கள் கூடுதல் தளங்களை உருவாக்கி பெரியளவில் வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 1 lakh crore plan for 14 mega national job zones in the works

Rs 1 lakh crore plan for 14 mega national job zones in the works
Story first published: Tuesday, November 13, 2018, 17:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X