உங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு எஸ்பிஐ வங்கியில் கணக்கு உள்ளதா? பல முறை உங்கள் கணக்கில் இருந்து பணம் தவறுதலாகக் குறைந்திருக்கலாம்-டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வி ஆனாலும், ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போதும். இப்படி உங்களுக்கு நடந்தால், ஒன்றும் பதட்டப்படத் தேவையில்லை. எஸ்பிஐ இணையதளத்தைப் பொறுத்த வரை உங்கள் பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் இதைச் செய்தால் போதும்.

 

வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்

வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்

முதலில் உங்களின் கணக்கில் இருந்து தவறுதலாகப் பணம் எடுக்கப்பட்டுள்ளதை எஸ்பிஐ வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள். இதைப் பதிவுசெய்ய இலவச எண்களான 1800 4253800, 1800 112211 -க்குத் தொடர்புகொள்ளுங்கள். வங்கி பிரதிநிதி உங்களுக்குப் புகார் பதிவிற்கான ஒரு எண்ணைக் கொடுப்பார். பின்னர் உங்கள் புகாருக்குக் கொடுக்கப்பட்ட எண்ணை வைத்து நீங்கள் அதன் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். புகாரைப் பதிவுசெய்ய மற்றுமொரு வழியும் உண்டு, இதற்கு மொபைல் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் "ஏடிஎம் டிக்கெட் நம்பர்" உள்ளடக்கி அதை 567676 எண்ணிற்கு அனுப்பவும்.

எத்தனை நாட்களுக்குள் புகார் அளிக்கவேண்டும்?

எத்தனை நாட்களுக்குள் புகார் அளிக்கவேண்டும்?

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தைப் பொறுத்தவரை பரிவர்த்தனை தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் உங்கள் புகார்களை அளிக்க வேண்டும்.

பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்?
 

பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்?

ஆர்பிஐ-யின் சட்ட விதிகளின் படி பணம் வாடிக்கையாளரின் கணக்கில் புகார் அளித்ததில் இருந்து அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள் திரும்பச்செலுத்தப் படும்.

 60 நாட்களுக்குள் புகார் செய்யாவிட்டால்

60 நாட்களுக்குள் புகார் செய்யாவிட்டால்

எஸ்பிஐ வங்கியைப் பொறுத்தவரை உங்கள் புகாரை 60 முதல் 120 நாட்கள் வரை பதிவுசெய்யலாம். நல்ல நம்பிக்கை உள்ள பரிவர்த்தனைகள் மட்டுமே 60 நாட்களுக்கு மேல் 120 நாட்கள் வரை கோரிக்கையின் மூலம் ஒத்துக்கொள்ளப்படும். அதற்கு முக்கியமாகச் சம்மந்தப்பட்ட வங்கி ஒத்துக்கொண்டால் மட்டுமே பணம் வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பச்செலுத்தப்படும்.

 ஏடிஎம் பரிவர்த்தனை

ஏடிஎம் பரிவர்த்தனை

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) விதிகளின் படி, மற்ற வங்கி ஏடிஎம்-ல் பரிவர்த்தனை தோல்வி அடைந்துவிட்டால் அது 120 நாட்கள் மேல் புகார் செய்தாலும் திரும்பப்பெற முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI account holder? You may lose money! Do this for failed transaction refund claim, complaint

SBI account holder? You may lose money! Do this for failed transaction refund claim, complaint
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X