சேலம் ரயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை!

சேலம்: மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் சேலம் ரயிலில் 5.75 கோடி ரூபாய் திருடிய கொள்ளையர்கள் பெரிய அளவில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வரப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக் கட்டுக்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மூலம் உடைத்து 16 பெட்டிகளில் இருந்த ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் நேற்றோடு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பழைய 500 மற்றும் 1000

பழைய 500 மற்றும் 1000

காவல் துறையினரை பொறுத்தவரைத் திருடப்பட்ட பணத்தை முழுவதையும் அவர்களால் செலவுசெய்ய முடியவில்லை. ஏன் என்றால் கொள்ளையடித்ததில் இருந்து சரியாக மூன்று மாதத்திற்குள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்துவிட்டது. இதனால் ஆகஸ்ட் மாதம் கொள்ளையடித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் மாதம் செல்ல காசு ஆகிவிட்டனர்.

CBCID அறிக்கை

CBCID அறிக்கை

CBCID அறிக்கையைப் பொறுத்தவரை கொள்ளையடித்த 5 நபர்கள் மொஹார் சிங், ரூஷீ பார்டி, மகேஷ் பார்டி, கலிய்யா எனும் கிருஷ்ணா, கபு மற்றும் பில்டியா-வை காவல் துறையினர் மத்திய பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

அயோத்திபட்டினம்-விருத்தாசலம்

அயோத்திபட்டினம்-விருத்தாசலம்

மேலும் காவல்துறையினர் கூறுகையில் இவர்கள் ஜனவரி 2016-ல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் ரயில் நிலையங்கள் அருகில் தங்கியிருந்த பொது அவர்களின் நண்பர் ஒருவர் சேலத்தில் தங்கியிருந்தார். அவரின் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்குப் பணம் ரயில் மூலம் எடுத்துச்செல்லப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தக் கும்பல் அயோத்திபட்டினம்-விருத்தாசலம் ரயில்நிலையங்கள் இடையே பல முறை பயணம் செய்து திருடுவதற்காகத் திட்டத்தைத் திட்டியுள்ளார் எனக் காவல் துறை தரப்புக் கூறுகிறது.

 

சின்னசேலம்-விருத்தாசலம்

சின்னசேலம்-விருத்தாசலம்

இந்தக் கும்பல் தங்களது திட்டத்தைச் சின்னசேலம்-விருத்தாசலம் இடையே நடத்த முடிவுசெய்துள்ளனர். ஏன் என்றால் இந்த இரண்டு ஊர்களுக்கு நடுவில் 45 நிமிடங்கள் ரயில் தொடர்ந்து பயணத்தில் தான் இருக்கும் எந்த ஒரு நிறுத்தமும் கிடையாது.

வெல்டிங் மிஷின்

வெல்டிங் மிஷின்

கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மிஷின் மூலம் ஒரு ஆள் செல்லும் அளவுக்குத் துளை போட்டுள்ளனர். அந்தத் துளை மூலம் இருவர் உள்ளே சென்று பணத்தை லுங்கியில் வைத்துத் திருடியுள்ளனர்.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை

காவல் துறையின் இறுதிக்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால் திருடிய பணத்தை ஐவர் இடையே சமமாகப் பிரித்துள்ளனர். ஆனால் அதை முழுமையாகச் செலவு செய்வதற்குள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அரசு பிறப்பித்துவித்து. இதனால் கொள்ளை பணத்தில் 1.78 கோடிக்கு ஆசையா சொத்து வாங்கியுள்ளனர் மற்றும் 2 கோடி ரூபாயை எரித்துவிட்டதாகக் காவல்துறை கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+