ஆந்திராவில் இருந்து தனியாகப் பிரிந்த தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரும், டிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி கஜ்வெல் தொகுதியில் இருந்து போட்டி போட முடிவு செய்து அதற்கான மனுவையும் கொடுத்துள்ளார். இந்த மனுவோடு சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பையும் கொடுத்துள்ளார்.
20.60 கோடி ரூபாய்
தற்போது சந்திரசேகர ராவ் கொடுத்துள்ள விபரங்கள் அடிப்படையில் இவருக்கு 20.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகவும், இவருக்கும், இவரது மனைவிக்கும் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாய நிலம்
கேசிஆர் என அழைக்கப்படும் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு 10.40 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 12.20 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் முக்கியமான அசையா சொத்தாக 54 ஏக்கர் விவசாய நிலம் 6.50 கோடி மதிப்புடையது எனத் தெரிவித்துள்ளார்.
மனைவி கே. சரோஜா
இவரது மனைவி கே. சரோஜா பெயரில் 94.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளதாக அறிவித்துள்ளார்.
விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம்
2017-18ஆம் நிதியாண்டில் வருடாந்திர வருமானமாக வருடத்திற்கு 2.07 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 91.52 லட்சம் ரூபாய் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கான பிராட்காஸ்டிக் பிரைவேட் லிமிடெட்
மேலும் தெலுங்கான பிராட்காஸ்டிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 4.71 கோடி ரூபாய் முதலீடும், 5.63 கோடி ரூபாய் வங்கி வைப்பு நிதியாகவும் வைத்துள்ளார். இதேபோல் ஹைதராபாத் கரிம்நகரில் 5.10 கோடி ரூபாய் மதிப்பிலான வீடும் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
64 வழக்குகள்
மேலும் கேசிஆர் பெயரில் சுமார் 64 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலானவை தெலுங்கானா பிரிவினையில் போது பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications