ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் பிரபல மோட்டார் சைக்கிள் பிராண்டாக இருந்து வந்த ஜாவாவை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் அறிமுஙம் செய்துள்ளது.
ஜாவா மோட்டார் சைக்கிள் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியை மஹிந்தரா அளிக்க உள்ளது. இதன் தாகத்தினைக் குறைக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஊழியர்கள் சம்பள உயர்வு போன்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
ஜாவா பைக் மாடல்கள்
மஹிந்தரா நிறுவனம் ஜாவா பைக்குக்களை ஜாவா செண்ட்டர், ஜாவா ஃபோர்டி டூ மற்றும் பெராக் என மூன்று மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது.
ஜாவா செட்டர் மற்றும் ஜாவா ஃபோர்டி வாகனங்கள் 2019-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் உள்ள 105 டீலர்களிடம் இருந்து பெறலாம் என்று மஹிந்தரா தெரிவித்துள்ளது.
என்ன விலை
ஜாவா பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலை
ஜாவா (செண்ட்டர்) - ரூ. 1.64 லட்சம்
ஜாவா ஃபோர்டி - ரூ. 1.55 லட்சம்
ஜாவா பெராக் - ரூ. 1.89 லட்சம்
மஹிந்தராவின் ஜாவா பைக்குகளுக்கு இணையான விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பைக் சிசி
முதற்கட்டமாக 293 சிசி, 334 சிசி மாடல் ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வருகிறது. பி-6 இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் எடை 170 கிலோ, டிஸ்க் பிரேக் வசதியும் உண்டு.
வண்ணங்கள்
டபள் கிரேடல் பிரேம் உடன் பைக்குகள் ஜாவா பைக்குகள் வருகிறது. கருப்பு, மெரூன், க்ரே என 6 வண்ணங்களில் கிடைக்கும் என்றும் மஹிந்தரா தெரிவித்துள்ளது.
புக்கிங்
ரூ. 5000 செலுத்தி டீலர்கள் மூலம் ஜாவா மோட்டார் சைக்கிள்களை வாங்கலாம் என்றும் மஹிந்தரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications