இந்தியாவில் முன்னணி மற்றும் பழமையான ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த 9 வருடம் இல்லாத வகையில் இக்காலாண்டில் அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
இந்தத் திடீர் லாப உயர்விற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் தற்போது ஸ்டீல் விலை அதிகமாக இருப்பதாலும், மத்திய அரசு தொடர்ந்து அறிவிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தால் நாடு முழுவதும் ஸ்டீல் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் விற்பனை அளவும் அதிகரித்துக் காணப்படுகிறது.

செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் அளவு 4 மடங்கு உயர்ந்து 3,604 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சந்தை கணிப்புகள் இதன் அளவு 2,610 கோடி ரூபாயாக இருக்கும் என அறிவித்த நிலையில் தற்போது 3,604 கோடி ரூபாய் லாபம் என உச்ச அளவீட்டைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 34.1 சதவீதம் உயர்ந்து 43,544 கோடி ரூபாய் என மிகப்பெரிய அளவீட்டை தொட்டுள்ளது.


Click it and Unblock the Notifications