டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பில் ஒடிசா மாநிலத்தில் டீ தூள் பேக்கேஜிங் ஆலை ஒன்றை நிறுவ உள்ளது. ஒடிஸா கனிமங்கள் அதிகம் இருக்கும் வளமான மாநிலம். அங்கு பல்வேறு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் தொழில் செய்து வருகிறார்கள்.
சிறப்புப் பொருளாதார மண்டலம்
அந்த இடத்தில் டாடா குழுமத்தின் டாடா ஸ்டீல் நிறுவனமும் இயங்கி வருகிறது. டாடா ஸ்டீல் இருக்கும் இடம் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ). அந்த இடத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கும் உபரி நிலத்தில் தான் இந்த ஆலை அமைய உள்ளது.
அறிவிப்பு
இதற்கான அனுமதி கடிதத்தினை டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் SEZக்கு அனுப்பியுள்ளதாம். கோபால்பூர் தொழில்துறை பூங்காவில் இந்த ஆலை அமையும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் டாடா குழுமத்தினர்.
செபிக்கு கடிதம்
டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம், பங்குச் சந்தைகள் மற்றும் அதன் கண்காணிப்பு வாரியமான செபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆலை தொடங்குவதற்கு சுமார் ரூ.100 கோடியை இரு நிறுவனங்களும் செலவிட உள்ள கூடுதல் தகவல்களும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
2020
2020-ல் இந்த ஆலை முழுமையாக செயல்படும் போது, ஆண்டுக்கு 36 மில்லியன் கிலோ டீ பேக்கிங் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்த பின்னர் 2020-ம் ஆண்டிலிருந்து தான் ஆலை செயல்படத் தொடங்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சில கூடுதல் வசதிக்காக
இந்தப் புதிய ஆலையில் டீ உற்பத்தி மற்றும் பேக்கிங்களுடன், சேமிப்பு கிடங்கு வசதிகளும் இருக்கின்றன. டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள், கூட்டு நிறு வனங்களின் தயாரிப்புகளையும் இந்த சேமிப்பு கிடங்குகளில் வைக்க அனுமதிக்கப்படுவார்களாம். புவனேஸ்வரில் நடைபெற்ற `மேக் இன் ஒடிசா' மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது டாடா குழுமம்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications