மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் பட்டியல் கொடுத்த சிதம்பரம்... வேற ஏதாவது வேணுமா... கலாய்த்த சிதம்பரம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை, காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க காங்கிரஸ் முன் வருமா" என சத்திஸ்கர் தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

 

சத்திஸ்கர் பிரசாரத்தில்

சத்திஸ்கர் பிரசாரத்தில்

காங்கிரஸ் கட்சியினரால் தொடர் தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜக-வின் அடிமட்ட தொண்டானான ஒருவன் இன்று நாட்டின் பிரதமராக இருப்பது... தேநீர் வியாபாரியான நான் பிரதமர் ஆனது எல்லாம் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியினர் பாஜக-வின் மீது வீன் பழி சுமத்தி வருகிறது எனவும் அந்த பிரசாரத்தில் பேசினார்.

அவங்க என்ன பண்ணாங்க

அவங்க என்ன பண்ணாங்க

அதோடு நேரு காந்தி குடும்பம் காங்கிரஸில் இருந்து கொண்டு நாட்டுக்கு என்ன நல்லது செய்தார்கள்.. அவர்கள் குடும்ப அரசியல் செய்து நன்றாக வாழ்கிறார்கள். நாட்டு மக்களுக்கு என எதுவும் செய்யவில்லை தானே என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

பதிலடி
 

பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் காங்கிரஸ் கட்சியின் ப சிதம்பரம் மூன்று டிவிட்களை போட்டிருக்கிறார். அதில் காந்தி குடும்பம் அல்லாத காங்கிரஸ் தலைவர்கள்ளின் பெயர்களை பட்டியல் இட்டு இருக்கிறார்.

ட்விட்டுகள்

ட்விட்டுகள்

இந்த ட்விட்களைத் தொடர்ந்து மோடி நாட்டின் விவசாயிகளின் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பசு வதைக்கு எதிர்பான பிரச்னைகள், தீவிரவாதப் பிரச்னைகளுக்கு எல்லாம் வாய் திறக்கவில்லையே எனவும் கேட்டு இருக்கிறார்.

ப சி கருத்து

ப சி கருத்து

மோடிக்கு நேரு காந்தி குடும்பங்கள் என்ன செய்தது என விசாரிக்க நேரம் இருக்கிறது ஆனால் நாட்டில் உள்ள நடப்பு பிரச்னைகளை பேசி தீர்க்கத் தான் நேரமில்லை என காட்டமாக பதிலளித்திருக்கிறார் ப சிதம்பரம்.

நக்கல்

நக்கல்

எங்க கட்சி தலைவர்கள் யாருன்னு பாக்குற நேரத்துல கொஞ்சம் ஜிஎஸ்டி, ரஃபேல், சிபிஐ, ஆர்பிஐ-ன்னு சில பிரச்னைகளையும் பாத்தா நாட்டு மக்களுக்கு புண்ணியமா போகும்... என்றும் ஒரு ட்விட்டில் கலாய்ந்த்திருக்கிறார் ப சிதம்பரம்.

வழக்குப் பிரச்னைகள்

வழக்குப் பிரச்னைகள்

ப சிதம்பரம் மீது மத்திய அரசின் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை என்று பல்வேறு அரசு அதிகார மையங்கள் தொடர்ந்து வழக்கு தொடுத்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pc tweets gandhi
English summary

chidrambaram tweeted the list of congress leaders outside Gandhi Nehru family

chidrambaram tweeted the list of congress leaders outside Gandhi Nehru family
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X