தேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்!

நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உங்களுக்குப் பிஎப் கணக்கு உள்ளதா? இதோ உங்களுக்கு ஓர் நற் செய்தி. வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் சந்தாதார்களுக்காக ஒரு குறைந்த விலை வீடு அளிக்கும் வரைவறிக்கையினைத் தயார் செய்துள்ளது. இந்த வீடு திட்டத்தினை மத்திய அறங்காவல் துறையிடம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சமர்ப்பித்துள்ளது.

மத்திய அறங்காவல் துறை இதற்கு அனுமதி அளித்த உடன் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் வீடு திட்டம் 2019 தேர்தலுக்கு முன்பு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இந்த வீடு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் லட்சம் கணக்கான பிஎப் சந்தாதார்கள் வீடு வாங்கிப் பயன் பெறுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரெல்லாம் வீடு புக் செய்ய முடியும்?

யாரெல்லாம் வீடு புக் செய்ய முடியும்?

தொடர்ந்து 3 வருடத்திற்குப் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இந்தத் திட்டம் கீழ் வீட்டை புக் செய்ய முடியும். அதே சமயம் அவர்கள் பெயரில் வேறு எந்த ஒரு வீடும் பதிவு செய்யப்பட்டு இருக்கக் கூடாது.

பிஎப் தொகை

பிஎப் தொகை

அது மட்டும் இல்லாமல் பிஎப் சந்தாதார்களால் வீடு வாங்க 90 சதவீத பிஎப் தொகையினை இடையில் எடுக்கவும் முடியும். வீட்டு கடனின் ஈஎம்ஐ தொகையையும் பிஎப் கணக்கு மூலமாகச் செலுத்த முடியும்.

அரசு

அரசு

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் பிஎப் கணக்குக் கீழ் வீடு வாங்குவது அல்லது புக் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தயார் நிலையில் உள்ளது. வருங்கால வைப்பு நிதி ஆணையம் மற்றும் அரசும் அதற்கான பணிகளை முடிப்பதில் தீவிரமாக உள்ளன.

வரைவறிக்கை

வரைவறிக்கை

வரைவறிக்கையின் படி தேசிய வீடு சங்கம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அதன் கீழ் அரசு உதவியுடன் நாடு முழுவதும் குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுக் கட்டிட நிறுவனங்களுடன் இணைந்து இந்த வீடு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

கடன்

கடன்

பிஎப் ஆணையத்தின் வீடு சங்கம் இல்லாமல் வெளியில் வீடு வாங்க வேண்டும் என்றாலும் அதற்கான கடன்களையும் பிஎப் ஆணையம் வழங்கத் தயாராக உள்ளது.

பிஎப் சந்தாதார்கள்

பிஎப் சந்தாதார்கள்

2018 ஆகஸ்ட் மாதம் மட்டும் 8.95 லட்சம் நபர்கள் பிஎ பயனாளிகளாக இணைந்துள்ளனர். தற்போது வரை 6 கோடிக்கும் அதிகமான பிஎ பயனாளிகளாக உள்ளனர்.

வருங்கால வைப்பு நிதி ஆணையம்

வருங்கால வைப்பு நிதி ஆணையம்

வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் சந்தாதார்களிடம் இருந்து பெற்ற பங்களிப்பின் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை நிர்வகித்து வருகிறது. இந்த ஆண்டு முதல் பிஎப் சந்தாதார்க்கு ஒரு மாதம் வேலை இல்லை என்றும் 75 சதவீதம் பணத்தினை இடையில் எடுக்க அனுமதி அளித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+