மஹிந்தரா & மஹிந்தரா நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் 2019 ஜனவர் 1 முதல் எஸ்யூவி மற்றும் மாரெஸ்ஸோ கார்களின் விலையினை 30,000 ரூபாய் முதல் 40,000 வரை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மஹிந்தாவின் மாரெஸ்ஸோ கார் அறிமுகம் செய்யப்பட்டு 4 மாதங்களே அன நிலையில் 2019 ஜனவரி 1 முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
மாரெஸ்ஸோ காரினை மஹிந்தரா டிசைன் ஸ்டூடியோ மற்றும் இத்தாலியின் டிசைன் ஹவுஸ் நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்தன. இந்தக் கார் தயாரிப்புக்கான பணிகளில் சென்னை மஹிந்தரா ரிசர்ச் வேலியும் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
டொயாட்டா இன்னோவா
டொயாட்டாவின் இன்னோவா கார் மாடலுக்குப் போட்டியாகவே மஹிந்தரா நிறுவனம் மாரெஸ்ஸோ காரினை அறிமுகம் செய்தது.
தற்போதைய விலை
மஹிந்தரா மாரெஸ்ஸோ எம்2 கார் 9,99,000 ரூபாய் எனவும், எம்4 கார் 10,95,000 ரூபாய் எனவும், எம்6 கார் 12,40,000 ரூபாய் எனவும், எம்8 கார் 13,90,000 ரூபாய் எனவும் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தக் காரின் விலை 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications