மக்கள் பணம் 3000 கோடியை செலவு செய்து patel சிலையா, தேவ கெளடா சிலையா என்றே தெரியாமல் ஒரு சிலையை அக்டோபர் 31-ம் தேதி நாட்டுக்கு சமர்பித்தாரே பிரதமர் மோடி. அந்த சிலை தற்போது வானில் இருந்து போட்டோ எடுத்தால் கூட தெரிகிறதாம் இது தான் செய்தி.
மனித உருவாக்கம்
உலகின் பல்வேறு விஷயங்கள் இப்படி வானில் இருந்து போட்டோ எடுக்கும் போது தெரியும்... அவைகளில் பெரும்பாலானவைகள் இயற்கையாகவே உருவாக மலைகள், ஆறுகள், கடற்கரைகள் போன்றவைகள் தெரியும். ஆனால் வெகு சில விஷயங்கள் மட்டும் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டவைகள்.
எகிப்திய பிரமீடுகள்
எகிப்திய கிஸா ப்ரமீடுகள் இப்படி மனிதர்களால் உருவானவைகளே. அவைகள் வானத்தில் இருந்து போட்டோ எடுத்தால் கூட தெரியும். சர்வதேஎச விண்வெளி மையத்தில் இருந்து எடுத்த புகைப்படம் இதோ உங்களுக்காக. புகைப்படத்தில் குறியிட்டிருக்கும் இடத்தைப் பார்க்கவும்.
துபாய் தீவுகள்
இன்னொரு மனித உருவாக்கத்தின் உச்சம்... துபாய் நகரத்தில் உள்ள செயற்கைத் தீவுகள். விண் வெளியில் இருந்து சுமார் பூமியின் தரைமட்டத்தில் இருந்து 350 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் உங்களுக்காக.
படேல் சிலை
ற்போது இந்த வரிசையில் உலகின் மிகப் பெரிய சிலை என்கிற பெயரைத் தவிர வேறு எந்த ஒரு பயணும் இல்லாத, மக்கள் பணத்தை சுவ்வாஹா செய்த அந்த படேல் சிலையையும் விண் வெளியில் இருந்து படம் பிடித்திருக்கிறார்கள். இந்த சிலையும் தெரிகிறது இந்த 182 மீட்டர் சிலை.
3000 கோடிக்கு
அமெரிக்க சுதந்திர தேவிச் சிலையை விட இரண்டு மடங்கு உயரமான இந்த சிலைக்கு செய்த 3000 கோடிக்கு இந்திய மக்களுக்கு 3 கோடி கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்கலாம், 2 ஐஐடி அல்லது எய்ம்ஸ் மருத்துவ வளாகங்களை கட்டிக் கொடுத்திருக்கலாம், 4 சோலார் மின் நிலையங்களை நிறுவி இருக்கலாம், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக இந்த மொத்த தொகையையும் கொடுத்திருக்கலாம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகங்கம் போல 15 கட்டி மாணவர்களை ஈர்த்திருக்கலாம்.... இதை எல்லாம் செய்யாமல் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு, உலோகங்களை செலவு செய்துவிட்டு எதுக்கு மோடிஜி இந்த வீராப்பு...?
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications