மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையில் கடந்த சில மாதங்களாகவே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆர்பிஐ வாரிய கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆர்பிஐ - மத்திய அரசு அதிகாரிகள் இடையிலான இந்தக் கூட்டத்தில் பணப்புழக்கத்தினை அதிகப்படுத்தவும், கடன் அளிப்பு விதிமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்ட நிலையில் அது குறித்த முழு விவரங்களையும் இங்குப் பார்க்கலாம்.
பண மதிப்பு நீக்கம்
பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையிலிருந்தே ஆர்பிஐ மத்திய அரசு தங்களிடம் இது குறித்து விவாதிக்காமல் முடிவு எடுத்ததாக உரசல் ஏற்பட்டது. அது தொடர்ந்து வந்த நிலையில் மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவான போர்டு உறுப்பினர்களை ஆர்பிஐ-ல் நியமித்தது. இதனால் சுயாட்சி உள்ள ஆர்பிஐயில் மத்திய அரசின் தலையீடு அதிகமானது.
மோதல்
மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ இடையிலான மோதல் அதிகரிக்க ஆர்பிஐ கார்னருக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனை அடுத்து ஆர்பிஐ கவர்னர் தலையீடு இல்லாதது போன்று துணை கவர்னர் வைரல் ஆச்சர்யாவும் மத்திய அரசு ஆர்பிஐ உள்விவகாரங்களில் தலையிடுவது சரியல்ல என்றும் பொது மேடையில் கூறினார்.
ஆர்பிஐ சட்ட திருத்தம்
எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் மத்திய அரசு ஆர்பிஐ சட்டப்பிரிவு 7-ன் கீழ் திருத்தம் கொண்டு வந்து அதிகாரம் செலுத்த நினைப்பதாவும் உபரி நிதியாக உள்ள 9 லட்சம் கோடியில் 3.5 லட்சம் கோடி ரூபாயினைக் கேட்டுத் தொந்தரவு செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதனை முழுமையாக மறுத்தது.
கவர்னர் ராஜினாமா
இதனிடையில் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை இந்த வாரிய கூட்டத்துடன் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
ஆர்பிஐ வாரியக்குழு கூட்டம்
இவ்வாறு பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர், மத்திய அரசு பொருளாதார விவகாரத்துறை செயலாளர், நிதி துறை செயலாளர், ஆர்பிஐ போர்டு உறுப்பினர் எஸ்ச் குருமூர்த்தி, டாடா குழுமம் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் இடையில் விவாதிக்கப்பட்டது.
முடிவு
கூட்டத்தின் முடிவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் வழங்குவதை எளிமைப் படுத்துதல், ஆர்பிஐ வசம் உள்ள உபரி நிதியை அரசுக்கு அளித்தல், பொதுத் துறை வங்கிகள் விதிகளில் தளர்வு, விவசாயக் கடன் அளித்தல் போன்றவற்றில் சுமுக முடிவு காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வர இருக்கும் 2019 பட்ஜெட்டிற்கு முன்பே ஆர்பிஐ உபரி நிதியை அரசுக்கு அளிக்கும் என்றும் இதனால் பட்ஜெட்டில் இருந்து வந்த பற்றாக்குறை நீங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பொருளாதார வல்லுனர்கள் குழு
மேலும் ஆர்பிஐ பொருளாதாரம் முலதனம் குறித்து வல்லுநர்கள் குழு ஒன்றை அமைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் குழு வங்கிகள் மூலதனம் குறித்துத் திட்டமிட வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications