ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா இல்லை.. முக்கிய அதிகாரிகளின் நிலை மாற்றம்..!

இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என்று எழுந்த சர்ச்சை புதிது இல்லை என்றாலும் துணை கவர்னாரான வைரல் ஆச்சார்யா அக்டோபர் மாதம் ஒரு பொது மேடையில் ஆர்பிஐ வங்கியின் சுயாட்சிக்கு மரியாதை அளிக்காவிட்டால் நிதி சந்தை பெறும் அளவில் பாதிப்படையும் என்றும் எச்சரிக்கை விடுத்து புதிய சர்ச்சையினை ஏற்படுத்தியது.

ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா இல்லை.. முக்கிய அதிகாரிகளின் நிலை மாற்றம்..!

ஆர்பிஐ கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்கும் முன்பு ரகுராம் ராஜான் அந்தப் பொறுப்பினை வகித்துக்கொண்டு இருக்கும் போதில் இருந்தே மத்திய அரசுக்கு ஆர்பிஐ-க்கும் இடையில் பெறும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் ரகுராம் ராஜன் 2016-ம் ஆண்டுச் செச்ப்டம்பர் மாதம் ஆர்பிஐ கவர்னர் பதவியில் தான் நீடிக்க விரும்பவில்லை என்று பதவி விலகியதை அடுத்து ஆர்பிஐ கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்றார்.

உர்ஜித் படேல் ஆர்பிஐ கவர்னாராகச் செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற உடன் நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்கம் நடைபெற்றது. அதிலும் உர்ஜித் படேல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் கூடச் சர்ச்சைகள் எழுந்தது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது இந்திய பொருளாதாரம் பெறும் அளவில் சர்வினை சந்தித்த நிலையில் தற்போது ஓர் அளவிற்கு மீண்டு வந்துள்ள நிலையில் எங்களிடம் விவாதிக்காமலே மத்திய அரசு இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினைச் செய்ததாகச் சர்ச்சை எழுந்தது. அப்போது முதல் ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இடையில் அவ்வப்போது வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் அது அக்டோபர் மாதம் பொது மேடைக்கு வந்தது விவாதத்திற்குறியதானது.

மத்திய அரசு ஆர்பிஐ வங்கியிடம் உள்ள மிகப் பெரிய உதிரி தொகையினைக் கைப்பற்றவே சுயாட்சி உள்ள ஒரு நிறுவனத்தில் தலையிடுவதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்தது.

மறு பக்கம் மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் ஆடிட்டர் குருமூர்த்தியை ஆர்பிஐ வங்கியின் தலைவர்களுள் ஒருவராக நியமித்தது. இவருடன் சேர்த்து பாஜக முக்கியப் புள்ளிகளான சுபாஷ் சந்திர கர்க் மற்றும் ராஜிவ் கர்க் உள்ளிட்டவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியது.

இவர்கள் மூவரும் ஆர்பிஐ உள்விவகாரங்கள்லில் தலையிடுவது அதிகரித்த நிலையில் தான் முற்றின கத்திரிக்காய் தெருவுக்கு வந்த கதையாக மாறியது.

பொதுத் துறை வங்கி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ஆர்பிஐக்கு கூடுதல் அதிகாரம் தேவை, வங்கி அல்லா நிதி நிறுவனங்களின் அனுமதிகள் ரத்து, வங்கி அல்லா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள திவால் நிலை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் உள்ள சிக்கல் போன்றவை குறித்த விவாதங்கள் பிரச்சனையினைப் பெரிதாக்கின.

மத்திய அரசுக்குப் பட்ஜெட்டில் உள்ள தட்டுப்பாட்டினை குறைத்து 2019 தேர்தலுக்கு முன்பு ஆர்பிஐ வங்கியிடம் உள்ள உதிரி தொகையினைப் பெற்றுப் பயன்படுத்திக்கொள்ள முயல்வதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் நிதி அமைச்சரான ப சிதம்பரம் ஆர்பிஐ சட்டம் 7-ல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முயல்கிறது. இதனால் அரசால் மத்திய வங்கியினை மறைமுகமாக இயக்க முடியும் என்றும் இதனால் நிறையக் கெட்ட செய்திகள் வர வாய்ப்புகள் உள்ளதாகவும் உர்ஜித் படேல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வார் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஆர்பிஐ கவர்னர் மற்றும் அதிகாரிகளுக்கு முதுகெழும்பு உள்ளது என நிறுபிக்க வேண்டும் என்று திங்கட்கிழமை காலை கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை முதல் ஆர்பிஐ மற்றும் அரசு இடையில் நடைபெற்ற விவாதத்தில் சுமுக முடிவு காணப்பட்டு ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் முக்கிய அதிகாரிகளின் நிலை மற்றும் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மாலை 6:00 மணி அளவில் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பொதுத் துறை வங்கி நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்த ஆர்பிஐ வங்கிக்குப் பல முக்கிய அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு இனி ஆர்பிஐ வழங்கு இருந்த நிதி பிரச்சனை தீரும் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+