பாலிவுட் பாட்சாவான ஷாருக்கான் தன்னைத் தானே அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏர் இந்தியாவின் தூதராக அறிவித்துக்கொண்டார். நேற்றைய தினம் அவர் நியூ யார்க்கில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் பயணித்துள்ளார். இதனை அடுத்து அவர் பயணத்திற்குப் பிறகு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏர் இந்தியாவின் சேவை மற்றும் விருந்தோம்பலை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ட்வீட்
அதிகாரப்பூர்வமற்ற மற்றும் வெட்கமில்லாமல் நானே என்னை ஏர் இந்தியா நிறுவனத்தின் தூதராக அறிவித்துக்கொள்கிறேன். பைலட் மற்றும் விமான ஊழியர்கள் சிறப்பான விருந்தோம்பல் மற்றும் அழகான பயணத்தை அளித்தனர்.
ஏர் இந்தியா பதில்
கிங் கானிற்குச் சேவை அளித்ததில் ஏர் இந்தியாவிற்கு மிக்க மகிழ்ச்சி. உங்களின் இந்தப் பாராட்டு எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும். கிங் கானை எங்களது தூதரக இருப்பது எங்களுக்குப் பெருமை என ஏர் இந்தியா டிவிட்டரில் பதில் அளித்துள்ளது.
விளம்பர தூதர் இல்லை
இதில் கவனிக்கப் பட விஷயம் என்னவென்றால் இது வரையில் ஏர் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தூதரும் இல்லை. ஷாருக்கான் தானாகவே முன்வந்திருப்பதைக் கருத்தில் கொண்டு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஏர் இந்தியாவிற்கு அவரைத் தூதரக அறிவித்தால் சரிவில் இருந்து மீள்வதற்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக இருக்கும்.
ஏர் இந்தியாவின் நிலை
இந்த நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 55,000 கோடி ரூபாய் ஆகும். தற்போதைய நிதி ஆண்டில், கடந்த ஜூன் மாதம் வரையில் சுமார் 650 ரூபாய் நிதி பெற்றுள்ளது. அது போக அக்டோபரில் அரசு தரப்பில் இருந்து 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications