டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி தான் modi-ய ஜெயிக்க வெக்கப் போகுது... சொல்வது யார் தெரியுமா?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில் தான் இதுவரை கேள்விப்படாத பல்வேறு மதிப்பீட்டு மற்றும் கணிப்பு நிறுவனங்கள் எல்லாம் வந்து இந்த கட்சியினர் இவ்வளவு ஜெயிக்க இருக்கிறார்கள். இவ்வளவு தோற்க இருக்கிறார்கள் எனச் சொல்வார்கள். இப்போது ஒரு பிரபலமான பத்திரிகையில்... மக்களவைத் தேர்தல் குறித்து சில அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதுவும் பல கேள்விகள் நம் modi ஜிக்கு சாதகமாக, நிறைய காமெடியான விஷயங்கள் இருக்கு மேற்கொண்டு படிங்க.

 

8.44 லட்சம் பேர்

8.44 லட்சம் பேர்

இந்த பத்திரிகை குழுமத்தின் அனைத்து பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களிலும் கடந்த மே 23 - 25-ம் தேதிகளில் கொடுத்திருக்கிறார்கள். அதில் 8,44,646 பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். 9 மொழிகளில் இந்த சர்வேவை நடத்தி இருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

மொத்த 8.44 லட்சம் பேரில் 71.9 சதவிகித பேர் மோடிக்கு இன்னொரு வாய்ப்பையும் கொடுத்து 2019 - 2024 வரையான காலத்துக்கும் பிரதமர் ஆக்குவார்களாம். சரி அடுத்த பாயிண்ட் என்ன என்று பார்த்தால் 73.3 சதவிகிதத்தினருக்கு மோடி அரசு ஒரு நல்ல அரசாகத் தான் தெரிந்து இருக்கிறதாம்.

பிரதமருக்கு
 

பிரதமருக்கு

பிரதமர் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி தான் பதில் என டிக் அடித்தவர்கள் சுமார் 71.9 சதவிகிதத்தினர். எங்கள் தலைவர் ராகுல் தான் அதுக்கு சரிபட்டு வருவார் என்பவர்கள் 11.93 சதவிகிதத்தினர். இவங்க ரெண்டு பேருமே சரி வராது மற்ற யாராவது வரலாம் என்பவர்கள் 16.1 சதவிகிதத்தினர்.

மோடி ஆட்சி எப்படி

மோடி ஆட்சி எப்படி

ராம ராஜ்ஜியம் தாங்க என்று சிலிர்ப்பவர்கள் 47.47 சதவிகிதத்தினர்கள். பிரமாதமுங்க என்று சந்தோசப்படுபவர்கள் 20.60 சதவிகிதத்தினர், ம்ம்ம்ம் ஒகே ஒகே என்பவர்கள் 11.38 சதவிகிதத்தினர்கள். இதெல்லாம் ஒரு ஆட்சியா என்று வெறுப்பவர்கள் 20.55 சதவிகிதத்தினர்.

ஹெவியா அட்ராக்ட் பண்ணது எது

ஹெவியா அட்ராக்ட் பண்ணது எது

மோடிஜிக்கு ஜே சொல்லும் மகாத்மாக்களிடம்.... மோடிஜிகிட்ட எந்த விஷயம் உங்கள பலமா அட்ராக்ட் பண்ணுச்சு என்கிற கேள்விக்கு அதிகம் பேர் சொன்ன விடையைக் கேட்டால் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்... ஜிஎஸ்டி. அட ஆமாங்க 33.42% பேருக்கு ஜிஎஸ்டி சரியான நிர்வாக முடிவா பாக்குறாங்களாம். அதுக்கு அடுத்து நவம்பர் 8 புகழ் டிமானிட்டைசேஷனுக்கு 21.90% பேரும், 19.89% பேருக்கு பாகிஸ்தான் மேல நடத்துன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் ரொம்பப் பிடிச்சிருக்காம்.

சரி மோடி ஆட்சியில என்ன பிரச்னை

சரி மோடி ஆட்சியில என்ன பிரச்னை

வேலைவாய்ப்பை பெருக்கவே இல்லங்க, சும்மா ஜாலியா ஊர் சுத்திக்கிட்டுத் தான் இருக்காரு என்பவர்கள் 28.30 சதவிகிதத்தினர், பணமதிப்பு இழப்பு மாதிரி ஒரு சொதப்பல நான் பாத்ததே இல்லங்க என்பவர்கள் 22.20 சதவிகிதத்தினர்கள், காஷ்மீர் விவகாரத்துல ராஜதந்திரம் போதல என்பவர்கள் 22.20 சதவிகிதம்.

 வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி எதிர் கொண்டாரு

வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி எதிர் கொண்டாரு

ஓடிரு, என்னைய வெறுப்பேத்தாத என்பவர்கள் 36.03 சதவிகிதம், எல்லார மாதிரித் தான் ஒன்னும் ஸ்பெஷல் இல்ல என்பவர்கள் 37.29%, பிரமாதமா டேக்கில் பண்ணிட்டா என்று புலகாகிதம் அடைபவர்கள் 21.28%, சொல்றத்துக்கு இல்லங்க 5.40%.

மைனாரிட்டிகள் பாதுகாப்பு

மைனாரிட்டிகள் பாதுகாப்பு

மத்த எல்லா விஷயத்துலயும் எதோ கொஞ்சம் ஒத்து ஊடுறாங்க போல என ஒப்புக்கிறேங்க... ஆனா மோடி ஜி ஆட்சியில மைனாரிட்டிங்க பாதுகாப்பா இருந்தாங்களாங்குற கேள்விக்கு மனசாட்சியே இல்லாம 59.41% பேர் பாதுகாப்பா இருக்காங்கன்னு சொன்னப்பத் தான் இவங்க யாருகிட்ட போய் சர்வே எடுத்திருக்காய்ங்கன்னு தெரிய வருது. அடேய்களா உங்க கட்ட வேகாதுயா... வேகாது.

வெளிநாட்டு விவகாரங்கள்

வெளிநாட்டு விவகாரங்கள்

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா பண்ணி இருக்கா - 62.63%

சில விஷயங்கள தவிர நன்னா பண்ணினா - 17.43%

சுத்த மோசம் - 15.84%

ஒன்னும் சொல்றத்துக்கு இல்லங்க - 4.10%

மோடிய எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி

மோடிய எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி

டாலர், ஷார்பர், ஸ்ராங்கர் மோடி தான், அவரை அடிச்சிக்க முடியாது 57.12%, நீங்க வேணும்னா பாருங்க இது வொர்க் அவுட் ஆகும் 28.96%, நோ கமெண்ட்ஸ் - 13.92%

தனி மனித வாழ்கை தரம் எப்படி இருக்கு

தனி மனித வாழ்கை தரம் எப்படி இருக்கு

எங்கெயோ பொய்ட்டோம், எல்லாம் மோடியாலத் தான் - 55%

10 வருஷமா ஒன்னும் மாறளிங்கையா - 33.92%

என்னத்த சொல்ல - 11.08%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: election survey
English summary

71.9 percent Indians are supporting Modi to become prime minister again

71.9 percent Indians are supporting Modi to become prime minister again
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X