நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியானால் பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு ஓரு நன்றியைப் போட்டுவிடுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்திற்காகச் சம்பளம் இல்லை என்று மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் பாம்பே உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளால் மத்திய அரசு தங்களது ஊழியர்களுக்கு எந்த ஒரு தடங்களுமின்றிச் சம்பளத்தினைக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மும்பை துறைமுக ஊழியர்
துறைமுக ஊழியர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு முதல் வங்கி கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்ற காரணத்திற்காகச் சம்பளத்தினைத் தராமல் இருந்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்குப் பாம்பே உயர் நீதிமன்றம் இப்படித் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சகம்
மத்திய கப்பல் அமைச்சகம் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆதார் கார்டு உடன் சம்பள வக்கி கணக்கினை இணைக்க வேண்டும் என்று ரமேஷ் பவுர்லே என்ற ஊழியருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
மறுப்பு
ஆதார் கார்டுடன் வங்கி கணக்கை இணைப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அதைச் செய்ய மறுத்துள்ளார் ரமேஷ் இதனால் இவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சம்பளம் அளிப்பதை நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு
இதனை அடுத்து ரமேஷ் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மத்திய அரசு அவருக்கு நிலுவை தொகையுடன் சம்பளத்தினை வழங்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழக்கு குறித்த இறுதிக் கட்ட விசாரணை 2019 ஜனவர் 8-ம் தேதி வரி ஒத்தி வைக்கப்படுவதாகவும் பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நிலுவை தொகையுடன் சம்பளம்
மும்பை துறைமுக நிர்வாகம் ரமேஷின் சம்பளத்தினை 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் படி தற்போது அவருடைய சம்பளத்தினை நிலுவை தொகையுடன் வழங்கியுள்ளது.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications