இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பத்திரங்களின் வர்த்தகம் செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் ஆர்பிஐ இடையில் திங்கட்கிழமை நடைபெற்ற வாரிய கூட்டத்தில் சுமுக முடிவு காணப்பட்டதே காரணம் என்றும் கூர்கின்றனர்.
பண நெருக்கடியைச் சமாளிக்கத் திறந்த சந்தையில் பத்திரங்களை வாங்க அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பது வர்த்தகர்களை உற்சாகம் அடையைச் செய்துள்ளது. இதனால் பத்திர திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 7.36 ரூபாயாக உயர்ந்தது. செப்டம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு இதுவே மிகப் பெரிய உயர்வாகும். பத்து வருட அரசு பத்திரங்களின் வருவாயும் திங்கட்கிழமை 7.76 சதவீதத்தில் இருந்து 7.79 சதவீதமாக அதிகரித்தது.
சிறு குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை எளிமைப்படுத்துவது மற்றும் ஆர்பிஐ வசம் உள்ள உபரி தொகையினை அரசுக்கு அளிக்க ஒப்புக்கொண்டது போன்ற காரணங்களே இந்த உயர்வுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
அரசுக்கு உபரி தொகை கிடைக்கும் போது தேர்தலுக்கு முன்பான இடைக்காலப் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களைக் கவர வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications