சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமிக்கு இந்தியாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் போன் பிராண்டு என்ற பெருமையும் சியோமிக்கு உண்டு.
இப்படிப்பட்ட சியோமி நிறுவனம் ஒரே நாளில் இந்தியாவின் கிராம பகுதிகளில் 500 கடைகளைத் திறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
எப்போது?
சியோமி நிறுவனம் இந்தக் கின்னஸ் சாதனையினை 2018 அக்டோபர் 29ம் தேதி நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சியோமி ரிடெயில் ஸ்டோர்கள் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள எம்ஐ ஹோம் ஷோரூம்களுக்கு இணையானது என்றும் கூறுகின்றனர்.
இலக்கு
2019-ம் ஆண்டு இறுதிக்குள் சியோமி நிறுவனம் இந்தியா முழுவதும் 5,000 எம்ஐ ஸ்டோர்களைத் திறந்து 15,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க உள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இந்தக் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆப்லைன் மொபைல் சந்தை
மேலும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் ஆப்லைன் மொபைல் சந்தையில் ஆதிகத்தினைச் செலுத்து 100 எம்ஐ ஹோம் ஷோரூம்களைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
வெற்றிகரமாக விற்பனை செய்யப்படும் போன்கள்
ரெட்மி 5ஏ மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ இரண்டு போஙளையும் 13,299 ரூபாய் என்றும், ரெட்மி 6, ரெட்மி 6ஏ போன்களை 6,599 ரூபாய் எனவும், ரெட்மி 6ப்ரோ மாடல் போனை 10,999 ரூபாய் என்றும் சியோமி அதிகளவில் தற்போது விற்பனை செய்து வருகிறது.
பிற வணிகங்கள்
சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொழில்நுட்ப வணிகங்கள் மட்டும் இல்லாமல் ஷூ, பேக், ஆடை மற்றும் பல விதமான பொருட்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications