இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் போட்டியால் ஏற்பட்டு வரும் நட்டத்தின் தாக்கத்தினைத் தவிர்த்து வெற்றி பெற 2 பில்லியன் டாலர் ரூபாயினை வங்கிகள் மூலம் கடன் பெற திட்டமிட்டுள்ளது.
சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் 3 முதல் 5 வருட தவணையில் 12 நிதி நிறுவனங்களிடம் டாலர் கடன் பெற பேச்சுவார்த்தையினை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள் தரப்பு ஏர்டெல்லின் லாபத்தினைக் குறைத்து மதிப்பிட்டதனாலும் Baa3 ரேட்டிங்கை குறைத்ததாலும் அதிகக் கடன் தொகை தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வணிக ரீதியான டெலிகாம் சேவை 2016-ம் ஆண்டு முந்தல் பயன்பாட்டிற்கு வந்தது முதல் போட்டி நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தினைப் பதிவு செய்து வருகின்றன. மறு பக்கம் ஆப்ரிக்க வணிகத்தினைப் பங்கு சந்தையில் வெளியிடுவதில் ஏர்டெல் நிறுவனத்திற்குக் காலத் தாமதமாகி வருகிறது.
கடன்
பார்தி ஏர்டெல் இண்டெர்னேஷலும் 1.75 பில்லியன் யூரோக்கள் அதாவது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை பெற 10 நிதி நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தினைத் தொடர்பு கொண்டு விசாரிக்க முயன்ற போது தகவல்கள் அளிக்க மறுத்துவிட்டனர்.
திவால் ஆகுமா?
ஏற்கனவே ஆர்காம், ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெற்று இருந்த அதிகப்படியான கடன் மற்றும் ஜியோ உடனான போட்டி காரணங்களால் திவால் ஆன நிலையில் எங்கு ஏர்டெல் நிறுவனமும் சில ஆண்டுகளில் திவால் ஆகிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications