இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் 2020-ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் 1,200 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் திறன் குறைவு காரணத்தினால் இந்தப் புதிய 1,200 வேலை வாய்ப்பினை இன்போசிஸ் உருவாக்க இருப்பதற்கான காரணம் ஆகும்.
டிஜிட்டல் திறன்
புதிய டிஜிட்டல் திறன் படைத்த ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதன் மூலம் தங்களது ஆஸ்திரேலியா வாடிக்கையாளர்களுக்காகக் கண்டுபிடிப்பு மையங்களையும் 2020-ம் ஆண்டுக்குள் அமைக்க உள்ளது.
பயிற்சி
ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் இல்லாமல் அதற்கு ஏற்ற டிஜிட்டல் திறன் பயிற்சியை அளிக்கவும் இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா பல்கலைக்கழக மாணவர்கள்
புதிய 1,200 வேலை வாய்ப்புகளில் 40 சதவீதத்தினை ஆஸ்திரேலியா பல்கலைக்கழகக் கணினி அறிவியல் மற்றும் வடிவமைப்பு பட்டதாரிகளாக இருப்பார்கள் என்றும் அதற்காகப் பலகலைக்கழகத்துடன் ஒப்பந்தம் போடவும் இன்போசிஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
அமெரிக்கா
மறுபக்கம் அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அங்கும் 2020-ம் ஆண்டுக்குள் 10,000 அமெரிக்கர்களைப் பணிக்கும் எடுக்கும் நடவடிக்கையில் இன்போசிஸ் ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications