வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏடிஎம் மையங்கள் சென்று பணம் எடுத்துக்கொள்ள முடியும். இப்படி வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மையங்கள் பல்வேறு வகையில் நன்மை அளித்து வந்த நிலையில் 2019-ம் ஆண்டுக் கிட்டத்தட்ட 1.13 லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்பட உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் மொத்தம் 2,38,000 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இந்த ஏடிஎம் மையங்களை வங்கி நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் வங்கி அல்லா நிதி நிறுவனங்களும் இயக்கி வருகிறன. வங்கி அல்லா நிதி நிறுவனங்களின் ஏடிஎம் மையங்களிலும் 15,000 மூடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
கிராமப்புற ஏடிஎம் மையங்கள்
மூடப்படும் ஏடிஎம் மையங்களில் நகரம் மற்றும் புற நகர் பகுதிகள் அல்லாத ஏடிஎம் மையங்கள் அதான் அதிகம் மூடப்படும் என்று தெரிவித்துள்ளனர். அப்படி எனில் கிராமப்புற மற்றும் சிறு நகர ஏடிஎம் மையங்கள் அதிகளவில் மூடப்பட வாய்ப்புள்ளது. பிரதான மந்திரி ஜன் தன் யோஜான கணக்குகளின் கீழ் தான் தற்போது 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டங்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அரசு வழங்கும் பல்வேறு மானியங்களும் வங்கி கணக்குகளுக்குத் தான் அளிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் இந்த முடிவு கிராமப்புற மக்களைப் பெரிய அளவில் பாதிக்கும்.
வேலை வாய்ப்பு இழப்பு
ஏடிஎம் மையங்களை மூடுவதன் மூலம் வங்கிகளுக்குச் செலவு குறைந்தாலும் அவற்றில் பணிபுரிந்து பலரின் வேலை வாய்ப்பும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
பண மதிப்பு நீக்கம்
பண மதிப்பு நீக்கம் பிறகு மக்கள் பெரும் அளவில் நிதி தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வ்வந்த நிலையில் தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில் வங்கிகளுக்குப் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகத்தினால் ஏடிஎம் இயந்திரங்களைச் சீரமைக்கவும் அதிகம் செலவாகி வருகிறது. இதுவும் ஏடிஎம் மையங்களை மூட ஒரு காரணமாகக் கூறப்படுகிறதுஜ்.
வருவாய் இழப்பு
ஏடிஎம் மையங்கள் சேவை என்ன தான் சிறப்பாக மக்களுக்கு உதவி வந்தாலும் குறைந்த இண்டர் சேஞ்ச் கட்டணம் போன்ற காரணங்களால் பெரியதாக வருவாய் ஏதுமில்லை. வருவாய் வளர்ச்சியும் இல்லை என ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஏடிஎம் துறை
இந்திய ஏடிஎம் துறை பண மதிப்பு நீக்க நடவடிக்கையிலிருந்து பலவேறு வகையில் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில் ஏமாற்றத்தில் உள்ளது. இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் வங்கிகள் ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications