மும்பை: ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் வணிக அதிகாரியான சஞ்சய் குமாரினை தலைமை இயக்க அதிகாரியாக நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சஞ்சய் குமார் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் இணைவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விமான நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தகவலின் படி சஞ்சய் குமார் ஏர் ஏசியா இந்தியாவின் வணிகச் செயல்பாடுகளைப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சுனில் பாஸ்கரன் கீழ் இருந்து பார்த்துக்கொள்ளவார்.
இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோவின் முன்னாள் ஊழியர் ஏர் ஏசியா இந்தியாவில் பணிக்கு சேருவது மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சஞ்சய் குமார் ஏர் ஷாஹாரா, ராயல் ஏர்லைன்ஸ், ஸ்மைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.


Click it and Unblock the Notifications