நாட்டின் முன்னணி டையர் நிறுவனமான அப்போலோ அதன் தூதரக சச்சினை நிமித்துள்ளது. சச்சின் 5 வருடங்களுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார். விளம்பரம் முன்னிட்டு முதல் முறையாக அப்போலோ நிறுவனம் ஒரு பிரபலத்துடன் கைகோர்க்கிறது.

எங்கள் முழு திறனையும் பயன்படுத்தி சிறந்த டயர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்போலோ துணை தலைவர் கூறுகையில்,"எங்களின் நோக்கம் சச்சினை எங்களோடு இணைத்ததன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது, எங்களின் இந்த இணை நீண்ட தூரம் செல்லும் என நம்புகிறோம்.
அப்போலோ டயர்ஸ் நிறுவனம், உலகின் மிகப் பிரபலமான கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட், இங்கிலிஷ் பிரீமியர் லீக் மற்றும் ஜெர்மனியின் கால்பந்து லீக்கான பன்டேஸ்லிகா போன்றவைகளுடன் இணைத்துச் செயல்பட்டு வருகிறது. இது போக இந்தியன் சூப்பர் லீக்கில் சென்னையின் எப்சி அணிக்கு அப்போலோ நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது.


Click it and Unblock the Notifications