வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக ஈஸ்டேப் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அபிஜித் போஸ் அவர்களைப் பேஸ்புக் நியமித்துள்ளது.
தகவல் பரிமாற்ற சேவை செயலியான வாட்ஸ்ஆப் யூபிஐ மூலம் பணம் பரிமாற்ற சேவையினை வழங்க முயன்ற போது வெளிநாட்டு நிறுவனத்திடம் எப்படி இந்தச் சேவை வழங்கலாம் என்று சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டில் வாட்ஸ்ஆப் தகவல்களைச் சேமித்தால் மட்டுமே பணப் பரிமாற்ற சேவையினைத் தொடர்ந்து வழங்குவோம் என்று கட்டுப்பாடுகளை விதித்தது.
வாட்ஸ்ஆப் தடை
மறு பக்கம் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களினால் தான் பொய் செய்திகள் அதிகம் பரவுகிறது எனவே இது போன்ற சேவைகளைத் தடை செய்ய வேண்டும் அல்லது ஒழுங்குமுறைபட்டுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இப்படியே சென்றால் இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு எங்குத் தடை வந்துவிடுமோ என்று அச்சம் அடைந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது இந்தியாவில் வாட்ஸ்ஆப் பிரிவுக்காக ஒரு அலுவலகத்தினைத் தொடங்க முடிவு செய்தது.
அபிஜித் போஸ்
அதன் ஒரு கட்ட நடவடிக்கையாக ஆன்லைன் வாலெட் நிறுவனமான ஈஸ்டேப் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அபிஜித் போஸ் அவர்களை வாட்ஸ்ஆப் இந்தியாவின் தலைவராகவும் நியமித்துள்ளனர். இதன் மூலம் வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் யூபிஐ பணப் பரிவர்த்தனை செவையினை எந்தத் தடங்களும் இன்றி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழிப்புணர்வு நிகழ்வுகள்
மேலும் வாட்ஸ்ஆப் மூலம் போலி செய்திகள் பரவுவதைக் குறைக்கக் காவல் துறையுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு
2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என்றும் கிரெடிட் ஸ்யூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இரண்டுக்கும் இந்திய சந்தை மிகப் பெரியது. இதை எக்காரணத்தைக் கொண்டும் பேஸ்புக் விடாது என்றும், தேர்தலுக்கு முன்பே போலி செய்திகள் வெளியாவதைத் தடுப்பதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications