குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை 3,000 கோடி ரூபாய் செலவில் திறந்து சர்ச்சைக்குள்ளானதே இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் குஜராத்தில் புத்தருக்குச் சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.
உலகின் மிகவும் உயரமான படேல் சிலையினை 182 அடி உயரத்தில் அமைத்துள்ள நிலையில் புத்தர் சிலையினை 80 அடி உயரத்திற்கு அமைக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.

ஆனால் படேல் சிலை போன்று புத்தர் சிலையினை நிறுவ எந்த ஒரு அரசும் முடிவு செய்யவில்லை. புத்த அமைப்பான சங்காக்யா இந்தச் சிலையினை வைக்க முடிவு செய்துள்ளது. தொண்டு நிறுவனமான இது அரசிடம் இருந்து இதற்காக நிலத்தினை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
படேல் சிலையைச் செய்த நொய்டாவை சேர்ந்த சிற்பியான ராம் சுதாரிடமே புத்தர் சிலையினை வடிவமைப்பதற்கான பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை தற்போது பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தில் மட்டுமே உள்ள நிலையில் குஜராத்தில் சங்காக்யா இந்தச் சிலையினை நிறுவ உள்ளது.
படேல் சிலை மற்றும் அதனைச் சுற்றுலா மயமாக்க 3,000 கோடியை அரசு செலவு செய்த நிலையில் புத்தர் சிலைக்கு எவ்வளவு செலவாகிறது போன்ற விவரங்கள் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications