ஐகியா ஃபர்னிச்சர் ஷோரூம் நிறுவனம் உலகம் முழுவதும் 7,500 நிர்வாக ஊழியர்களை அடுத்து வர இருக்கும் இரண்டு ஆண்டுகளில் பணியை வீட்டு நீக்க இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஐகியா நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 367 ஷோரூம்கள் உள்ள நிலையில் புதியதாக 11,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கி அலிக்கப் போவதாகவும் புதிய ஷோரூம்கள் திறக்க பட உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சோதனைகள்
ஐகியா நிறுவனம் டிஜிட்டல், துரித டெலிவர் மற்றும் பிற சேவைகளுக்கான சோதனைகளைச் செய்து வருவதாகவும். இவை அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் போது வாடிக்கையாளர்களுக்கு எங்களை அணுகுவது மேலும் எளிமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் வெளியேற்றம்
இரண்டு வருடங்களில் 7,500 நிர்வாக ஊழியர்களைப் பணியை விட்டு நீக்குவது நிறுவனத்தின் 5 சதவீத ஊழியர்களின் எண்ணிக்கை எனக் கூறப்படுகிறது.
செலவு
கடந்த சில ஆண்டுகளாக ஐகியா நிறுவனம் வணிகத்திற்காக அதிகளவில் முதலீடு செய்துவிட்டதாகவும் இதனால் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அதனைக் குறைக்கவே இந்த ஊழியர்கள் வெளியேற்ற நடவடிக்கைக்கான கரணம் என்றும் கூறுகின்றனர்.
பாதிக்கப்படும் ஊழியர்கள்
ஐகியா நிறுவனத்தின் இந்த ஊழியர்கள் வெளியேற்றம் மத்திய பணிகள் மற்றும் சர்வதேச சேவைகளில் இருந்து அதிகமாக இருக்கும் என்றும் தேவைப்பட்டால் உள்ளூர் சேவை அலுவலக ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் செயல்பாடுகள் அல்லது விநியோக பிரிவில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஐகியா இந்தியா
ஐகியா இந்தியா அன்மையில் ஹைதராபாத்தில் தங்களது கடையினைத் திறந்ததை அடுத்தப் பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் தங்களது கடைகளைத் திறக்க உள்ளனர்.
ரெண்ட் மோஜோ
இந்தியாவில் ஃபர்னிச்சர்களை வாடைக்கு விடும் ரெண்ட் மோஜோ நிறுவனத்துடன் இணைந்து செயல்படவும் ஐகியா ஒப்பந்தம் போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications