2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 10.5 சதவீதம் உயர்ந்து 21 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டில் இதுவே அதிகம் என்று தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் பெட்ரோல் பயன்பாடு ஒவ்வொரு நாளும் 4 சதவீதம் உயர்ந்து அக்டோபர் மாதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் இந்தியாவின் உள்நாட்டுக் கச்சா எண்ணெய் உற்பத்தி 7 சதவீதம் சரிந்துள்ளது.
தற்போது இந்தியா தனது 83.5 சதவீத கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியினையே நம்பி இருக்கின்றது.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களினால் 2018-2019 நிதி ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான செலவுகள் 55 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூபாய் மதிப்பின் தாக்கம் எப்படி?
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 6,158 கோடியாக இருக்கும் போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 1 ரூபாய் சரியும் போது 6,639 கோடி ரூபாயாகச் செலவு அதிகரித்துள்ளது.
இயற்கை எரிவாயு
இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியும் மோசமாக உள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 2,808 mmscm எரிவாயு உற்பத்தி செய்த நிலையில் இந்த ஆண்டு 2,798 mmscm ஆகச் சரிந்துள்ளது. அதே நேரம் இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதி 46.9 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 45.6 சதவீதமாகச் சரிந்துள்ளது.
பிரதமர் மோடியின் வாக்குறுதி
பிரதமர் மோடி அவர்கள் 2015-ம் ஆண்டு இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாய் இறக்குமதி தேவையினை 2022-ம் ஆண்டுக்குள் 77 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாகவும் குறைப்பேன் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அது 2018-ம் ஆண்டு 83.5 சதவீதமாக அதிகரித்து இருப்பது மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications