மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டங்களைச் செய்து கொடுப்பது வழக்கம். அப்படி எந்த மாநிலங்களில் எல்லாம் அதிகமான வளர்ச்சி திட்டங்களை நடைபெறுகிறது என்ற டாப் 10 பட்டியலினை கேர் ரேட்டிங் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியல் ஸ்டீல், மின்சாரம், போக்குவரத்து, அணு ஆற்றல், பெட்ரோலியம் & பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்ற திட்ட செயல்பாடுகளை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
இந்தியாவில் அதிகளவில் வளர்ச்சி திட்டங்களைச் செய்வதில் முதல் இடத்தினை 9.2 சதவீதத்துடன் மகாராஷ்டிரா அரசு பிடித்துள்ளது. 129 வளர்ச்சி திட்டங்கள் தற்போது இங்குச் செயல்பட்டு வருகிறது.
தமிழ் நாடு
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து 6.5 சதவீத வளர்ச்சி திட்டங்களுடன் தமிழ் நாடு இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேசம்
இந்தப் பட்டியலில் முதன் முறையாக இடம்பெற்றுள்ள உத்தபிரதேசம் 6 சதவீதத்துடன் 3-ம் இடத்தினைப் பிடித்துள்ளது.
ஆந்திர பிரதேசம்
மத்திய அரசு தங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறி வரும் சந்திர பாபு நாயுடுவின் ஆந்திர பிரதேசம் 5.1 சதவீத வளர்ச்சி திட்டங்களுடன் 4வது இடத்தினைப் பிடித்துள்ளது.
ஒதிசா
கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுமானம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளைக் கவருவதில் முதன்மையாகத் திகழ்ந்து வரும் ஒதிசாவில் 4.3 சதவீத வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
டாப் 6 முதல் 10 வரை
6. கர்நாடகா - 4 %
7. பீகார் - 4.3%
8. மத்திய பிரதேசம் - 3.5%
9. மேற்கு வங்கம் - 3.1%
10. சட்டிஷ்கர் - 3.5%
குஜராத்
நாடு முழுவதும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாகக் கூறப்படும் குஜராத் இந்தப் பட்டியலில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications